ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, விராட் கோலி இந்திய வீரர்களுக்கு இந்தூரில் தனது ஸ்லிப் கேட்ச்சிங் பயிற்சி அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி (நாளை) மார்ச்1ம் தேதி ஹோல்கர் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் மூன்று நாட்களுக்குள் நாக்பூர் மற்றும் டெல்லியில் நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 


முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியவை வீழ்த்தியது. மூன்றாவது டெஸ்டிலும் இந்திய அணி வெற்றிபெற்றால், ரோகித் சர்மா தலைமையிலான மென் இன் ப்ளூ வருகின்ற ஜூன் மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். 


 அடுத்து வரும் போட்டிகள் முக்கியமானது என்பதால் மூன்றாவது டெஸ்டில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி வீரர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில், சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி ஸ்லிப் கேட்ச் பயிற்சி அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில், ”மைதானத்தில் சில வேடிக்கையான தருணங்கள்” என பதிவிட்டு இருந்தது. 






தற்போதைய டெஸ்ட் புள்ளிகளின் அடிப்படையில் ஆஸ்திரேலியா 66.67 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக 64.06 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 


இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுமா இந்தியா..? 


நடைபெற்று வரும் பார்டர்- கவாஸ்கர் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றால் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். ஆனால், மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி மீண்டு வந்து வென்றால் இந்தியா அணி 63.16 புள்ளிகள் சரிந்துவிடும். இந்த சூழ்நிலையில், வரவிருக்கு தொடரில் இலங்கை அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வென்றால், இறுதிப்போட்டியில் இலங்கை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும். 


இறுதிப்போட்டி:


இந்தியா 3-0, 3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் தொடரை வென்றால், 68.06 வெற்றி சதவீதத்துடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஆஸ்திரேலியா தொடரை 4-0 என்ற கணக்கில் இழந்தால், புள்ளிகள் சதவீதம் 60க்கு கீழே குறையும். இதன்மூலம், இந்தியா- இலங்கை இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு அமையும். 


இப்படி நடைபெறாமல் இருக்க இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தோல்வியை சந்தித்து, ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் தோற்றால், இந்தியாவுடன் சேர்ந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். இந்த சூழ்நிலையில், பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணி, இறுதிப்போட்டியில் தங்கள் இடத்தை உறுதி செய்வதற்காக இந்தியா மற்றொரு டெஸ்டில் வெற்றி பெறுவதைத் தடுக்க முயற்சிக்கும்.