ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தூரில் நடைபெற்று வரும் போட்டியில் 33 ஓவர்களில் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 22, கில் 21, பரத், உமேஷ் தலா 17 ரன்கள் சேர்த்தனர்.
அதேபோல், ஆஸ்திரேலிய அணி சார்பில் குஹ்னேமன் 5 விக்கெட்களும், நாதன் லயன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். டாட் மர்பி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
ஒரே ஒரு மணி நேரத்தில் இந்திய அணியின் பாதி பேர் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர், முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் கே.எஸ்.பாரத் பார்ட்னர்ஷிப்பை உருவாக்குகிறார்கள் என்று இந்திய ரசிகர்கள் நினைத்தபோது, ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டோட் மர்பியை அனுப்பி கோலியை வெளியேற்றினார். ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சி மற்றும் பீல்டிங் அணுகுமுறைகள் பாட் கம்மின்ஸை விட மிகச் சிறந்தவை என்பதை நிரூபித்துள்ளது. இதன் மூலம் தொடரை சமன் செய்ய ஸ்மித் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு:
ரோகித் சர்மா, சுப்மான் கில், ஸ்ரேயாஸ், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ் ஆகியோரின் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னேமன் இந்திய அணிக்கு சிம்மசொப்பனமாக மாறினார். அவர் 9 ஓவரில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்தார், இதில் 2 மெய்டன்.
இரண்டாவது அதிக விக்கெட் வீழ்த்தியவர் நாதன் லயன். 35 ஓவர்களில் 11.2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து புஜாரா, பரத், ஜடேஜா என 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தூரில் டாஸ் வென்ற பிறகு முதலில் பேட் செய்யும் முடிவு ரோஹித் சர்மாவுக்கு சரியாக அமையவில்லை. ஷுப்மான் கில், ரவீந்திர ஜடேஜா, ஷ்ரேயாஸ் ஐயர், சேதேஷ்வர் புஜாரா, கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஆட்டமிழந்தனர்.
இந்தியா vs ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் விளையாடும் XI
இந்திய ப்ளேயிங் லெவன்:
ரோஹித் சர்மா(கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத்(விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்
ஆஸ்திரேலியா ப்ளேயிங் லெவன்:
உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித்(கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், டாட் மர்பி, மேத்யூ குஹேமன்.