இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்காக இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (மார்ச் 19) மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 117 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆனது. இது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணியின் மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும். இந்தியாவில் இது மிகக் குறைந்த ஸ்கோராக பதிவாகியுள்ளது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் முதல் அதிர்ச்சி காத்து இருந்தது. மின்னல் வேகத்தில் பந்துகளை வீசிய மிட்ஷெல் ஸ்டார்க் இந்திய அணியின் தொடக்க வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார். குறிப்பாக சுப்மன் கில்லை முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் டக் அவுட் ஆக்கினார்.
இங்கு தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடியும் வரை இருந்தது. இதனால், இந்திய அணி வீரர்கள் மைதானத்துக்குள் வருவதும் போவதுமாகவே இருந்தனர். இந்திய அணியின் இறுதியில் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதற்கு முன்னர் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1986ஆம் ஆண்டு அகமதாபாத்தில் 141 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனதே இந்திய அணியின் மிகக் குறைந்த ஸ்கோராக பதிவாகியிருந்தது. இந்த குறைந்த ஸ்கோர் கணக்குகள் எல்லாம் இந்தியாவிற்குள் பதிவானது தாம். இது தவிர்த்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 100 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் திணறியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியின் டாப் 5 குறைந்த ஸ்கோர் விபரம்
- 1981 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதியில் சிட்னியில் நடந்த போட்டியில் இந்திய அணி 63 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இது தான் ஆஸ்திரேலிய அணியின் மிகக் குறிந்த ஸ்கோராக உள்ளது.
- அதேபோல், சிட்னியில் 2000ஆ ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி நடைபெற்ற மற்றொரு போட்டியில், இந்திய அணி 100 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
- 1991ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி பெர்த்தில் நடைபெற்ற மற்றொரு ஒருநாள் போட்டியில் இந்திய அணி 101 ரன்களுக்குள் சுருண்டது.
- 2023ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி 117 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இது இந்திய அணியின் இந்தியாவில் மிகக் குறைந்த ஸ்கோர் இதுதான்ன்.
- 2003ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 41.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் எடுத்தது.