இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 117 ரன்களுக்குள் சுருண்டுள்ளது.


இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்காக இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (மார்ச் 19) மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் முதல் அதிர்ச்சி காத்து இருந்தது. மின்னல் வேகத்தில் பந்துகளை வீசிய மிட்ஷெல் ஸ்டார்க் இந்திய அணியின் தொடக்க வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார். குறிப்பாக சுப்மன் கில்லை முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் டக் அவுட் ஆக்கினார். இங்கு தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடியும் வரை இருந்தது. இதனால், இந்திய அணி வீரர்கள் மைதானத்துக்குள் வருவதும் போவதுமாகவே இருந்தனர்.  இறுதியில் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து117  ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்ஷெல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளும், அப்பேட் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். 


 


இதற்கு முன்னர் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிஸ் ஹெட்டை முகமது சிராஜ் தனது சிறப்பான பந்து வீச்சினால் போல்ட் ஆக்கினார். 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டினை இழந்தது அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தது.  அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸிமித் களமிறங்கினார்.


நிதானமாக ஆடிவந்த இந்த ஜோடியை இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பிரித்தார். இவரது பந்துவீச்சில் நிதானமாக அடிவந்த ஸ்மித் 30 பந்தில் 22 ரன்கள் சேர்த்த நிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் அதிரடியாக ஆடிவந்த மிட்ஷெல் மார்ஸ் 65 பந்தில் 10 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி 81 ரன்கள் சேர்த்த நிலையில், ஜடேஜாவுன் சுழலில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின்னர்,  இந்திய பந்து வீச்சாளர்கள் நெருக்கடி மேல் நெருக்கடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. 


 

மிகவும் பலமான அஸ்திரேலிய அணியில் இன்று தொடக்க ஆட்டக்காரர் மிட்ஷெல் மார்ஸைத் தவிர  ஒரு பேட்ஸ்மேன் கூட நிலையாக ஆடவில்லை. அந்த அணி இறுதியில் 50 ஓவர்கள் கூட பேட்டிங் செய்ய முடியாமல் ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளும், ஷமி 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2  விக்கெட்டுகளும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.