இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற பிப்ரவரி 9 ம் தேதி முதல் தொடங்குகிறது. இதையடுத்து, தொடரை கைப்பற்றும் முயற்சியில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த பார்டர் - கவாஸ்கர் டிராபியை வெல்ல முக்கிய காரணமாக இருந்த இந்திய அணியின் மேட்ச் வின்னர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இந்த தொடரில் இல்லாததால், உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட கே.எஸ்.பாரத், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சைத் தவிர, விக்கெட் கீப்பிங்கிலும் இந்திய அணி பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. ரிஷப் பண்ட் காயம் மற்றும் கே.எல். ராகுல் உடல்நிலையை கருத்தில்கொண்டு கே.எஸ். பாரத் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு தனது முதல் டெஸ்டில் அறிமுகமாக இருக்கிறார். 


கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வாரா? 


தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலுக்கு விக்கெட் கீப்பிங் பொறுப்பு வழங்கப்படலாம் என்று இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் ஸ்போர்ட்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ”கேஎல் ராகுல் கடந்த ஒரு வருடத்தில் பலமுறை காயம் அடைந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அவருக்கு வாய்ப்பளிப்பது சரியான முடிவாக இருக்காது. டெஸ்ட் வடிவத்தில் உங்களுக்கு ஒரு சிறப்பு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை. தற்போது பாரத் மற்றும் இஷான் ஆகிய இரு விக்கெட் கீப்பர்கள் அணியில் உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போது விளையாடும் லெவனில் யாருக்கு வாய்ப்பு வழங்குவது என்பதை அணி நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்.


கே.எஸ்.பாரத்:



  • கே.எஸ். பாரத் இந்திய அணியில் கடந்த 1.5 ஆண்டுகளுக்கு மேலாக  தனது வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

  • கடந்த மே 2021 ல் கே.எஸ். பாரத் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.

  • விருத்திமான் சஹா பார்ம் - அவுட்டில் திணறி வந்த நேரத்தில், அவருக்கு மாறாக இந்திய அணியில் பாரத் இடம் பிடித்தார்.

  • ரிஷப் பண்ட் விபத்தில் காயம் அடைந்ததால், பாரத் மற்றும் இஷான் கிஷனும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

  • கே.எல். ராகுல் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்ய இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை.

  • ஒருநாள் தொடரில் இரட்டை சதமடித்தாலும் இஷான் கிஷன் தற்போதைய பார்ம் மற்றும் நீண்ட நாள் காத்திருப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கே.எஸ். பாரத்-க்கு அதிக வாய்ப்பு 


உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த சாதனை படைத்துள்ளார். ஆந்திராவுக்காக விளையாடும் கே.எஸ். பாரத் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இதுவரை 86 போட்டிகளில் 135 இன்னிங்ஸ்களில் 37.95 சராசரியில் 4707 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 9 சதங்களும், 27 அரைசதங்களும் அடங்கும். அதேபோல், ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 199 ரன்கள் எடுத்துள்ளார். 


ஆஸ்திரேலியா டூர் ஆஃப் இந்தியா 2023: 


டெஸ்ட் தொடர்:


பிப்ரவரி 9-13: முதல் டெஸ்ட்
பிப்ரவரி 17-21: இரண்டாவது டெஸ்ட்
மார்ச் 1-5: மூன்றாவது டெஸ்ட்
மார்ச் 9-13: நான்காவது டெஸ்ட்


ஒருநாள் தொடர்:


மார்ச் 17: முதல் ஒருநாள் போட்டி
மார்ச் 19: இரண்டாவது ஒருநாள் போட்டி
மார்ச் 22: மூன்றாவது ஒருநாள் போட்டி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:


ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ். பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா. முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.


இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி:


பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்