ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.. when the going gets tough, the tough get going, அந்த பழமொழிக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்திய டெஸ்ட் அணி தான். அந்த வகையில் எப்போது எல்லாம் இந்திய அணி நெருக்கடிக்கு தள்ளப்படுகிறோதோ அப்போது அதிலிருந்து மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும். அந்த வகையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு வெற்றி பெற்ற சில போட்டிகளை இந்த தொகுப்பில் காண்போம்.
பெர்த் டெஸ்ட் 2008:
2007-2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடரை இந்திய மட்டுமல்ல இந்திய ரசிகர்களும் மறக்க முடியாது. இந்த தொடரில் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக நடுவரின் முடிவுகள் தவறாக வழங்கப்பட்டது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக பல முடிவுகளை போட்டி நடுவர்களான ஸ்டீவ் பக்னர், ம்tஆகியோர் வழங்கினர். இது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் மறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இடையிலான குரங்கு சர்ச்சை விவகாரம் பூதகரமாக வெடித்தது. இந்திய அணி இந்த தொடரில் இருந்து விலகும் அளவுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியது. அதன் நடுவர்கள் மாற்றப்பட்டு இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. இதன் பிறகு பெர்த் டெஸ்டில் இந்திய அணி களமிறங்கியது. இந்தப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலியாவை 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி விளையாடிய விதம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு மைதானத்தில் பதிலடி கொடுத்தது. இந்த தொடரை இந்திய அணி 2-1 என்கிற இழந்த போதும் சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய அணி திரும்பி வந்த விதன் யாராலும் மறக்க முடியாது.
இதையும் படிங்க: IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
பிரிஸ்பென் டெஸ்ட் 2021:
2020/21 பார்டர் கவாஸ்கர் தொடர் என்பது இந்திய அணிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தொடராகும், அந்த தொடரின் முதல் டெஸ்டில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி இந்த தொடரில் அவ்வளவு தான் கேப்டன் கோலி தனது மகள் பிறந்ததால் உடனடியாக நாடு திரும்பினார். அதன் பிறகு ரகானே இந்திய அணியை வழிநடத்தினார்.மெல்போர்ன் டெஸ்ட்டை இந்திய அணி வெற்றி அசத்தியது. அதன் பிறகு சிட்னி டெஸ்ட்டில் அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி போராடி இந்தப்போட்டியை டிரா செய்தனர். இந்தப்போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் அஷ்வினை நீங்க பிரிஸ்பென்னுக்கு வாங்க என்று வம்பிழுத்தார். ஏனெனில் அந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி 27 ஆண்டுகளாக தோல்வியடைந்தது இல்லை. ஆனால் இந்திய அணி அந்த ரெக்கார்டையும் உடைத்து வெற்றி பெற்று சாதனை படைத்தது.
பெர்த் டெஸ்ட் 2024:
தற்போது நடந்த பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் ஓயிட் வாஷ் ஆனது, இதனால் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி தான் வெற்றிப்பெறும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, அஷ்வின், ஜடேஜா, கில் என முன்னணி வீரர்கள் யாரும் இடம்பெறாமல் இந்த போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் என்ன கடினமாக சூழ்நிலையில் இந்திய அணி வந்தாலும் வெற்றிப்பெறும் என்பதை மீண்டும் ஒரு முறை இந்திய அணி நிரூபித்ததுள்ளது.