Hardik Pandya: டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வது தொடர்பாக, கேப்டன் ரோஹித் சர்மாவுடன் பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். 


சொதப்பும் ஹர்திக் பாண்ட்யா..!


காயத்தில் இருந்து மீண்டு ஐபிலெ தொடர் மூலம் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பியுள்ள, மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிற்கு புதியதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது. நடப்பு தொடரில் இதுவரை விளையாட்யிஅ 6 போட்டிகளில் மொத்தமாக, 131 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். வெறும் 26.20 சராசரியுடன் அவரது பேட்டிங் செயல்திறன் மந்தமாகவே உள்ளது. பந்துவீச்சை பொருத்தமட்டில் கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும், முழுமையாக 4 ஓவர்களை விசவில்லை. அப்படி விசிய ஒரு சில ஓவர்களிலும் பாண்ட்யா ரன்களை வாரிக் கொடுத்தார். இந்த சூழலில் ஜுன் மாதம் தொடங்க உள்ள டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற, ஹர்திக் பாண்ட்யா சில குறிப்பிட்ட நிபந்தனைகளை  கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பிசிசிஐ போட்ட கண்டிஷன்:


வெளியாகியுள்ள தகவல்களின்படி, கேப்டன் ரோகித் சர்மா, தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கடந்த வாரம் மும்பையில் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதில் ஹர்திக்கின் தேர்வு குறித்த விவாதத்தின் போது, டி-20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படுவதற்கு அவர் தொடர்ந்து பந்துவீச வேண்டியது அவசியம் என நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை திறம்பட பந்துவீசாவ்ட்டால், அவர் அணியில் இடம்பெறுவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.


ரன்களை வாரிக்கொடுக்கும் பாண்ட்யா..!


பேட்டிங்கில் சொதப்பி வரும் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சிலும் நடப்பு தொடரில் மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளார். பவர்பிளே பந்துவீச்சாளராக இதுவரை 4 ஓவர்களில் 44 ரன்களை விட்டுக் கொடுத்தார், அதே நேரம் மிடில் ஓவரில்,  6 ஓவர்களில் 62 ரன்களுக்குச் சென்றார். ஒரு டெத் பவுலராக ஒரு ஓவர் வீசி 26 ரன்களை வரிக்கொடுத்தார். இதேநிலை தொடர்ந்தால், உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்ட்யாவிற்கு பதிலாக ஷ்வம் துபே தேர்வாகலாம் என கூறப்படுகிறது.


இந்திய அணியில் ஷிவம் துபே..!


ஹர்திக் ஒருவேளை இந்திய அணிக்கு தேர்வாகாவிட்டால், அவரது இடத்திற்கு சென்னை அணிக்காக விளையாடி வரும் ஷிவம் துபே தேர்வாகலாம். அதிரடியான பேட்டிங் மூலம் அவர் தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், ஆல்-ரவுண்டரான அவர் இம்பேக்ட் பிளேயராக மட்டுமே களமிறங்குவதும், பந்துவீசாதது குறித்தும் பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. ஒருவேளை ஹர்திக் பாண்ட்யா தங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாவிட்டால், ஷிவம் துபேவை தேர்வு செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அப்படி நடந்தால், அணிக்கு 4 ஓவர்கள் கொடுக்கக்கூடிய முழு ஆல்ரவுண்டராக அல்லாமல், ஷிவம் துபே ஒரு பகுதி நேர பந்துவீச்சாளராகப் பயன்படுத்தப்படுவார் என கருதப்படுகிறது.