இந்தியா ஐசிசி கடமைகளை மதிக்க வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால், இந்தியாவில் எதிர்கால போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பதன் மூலம் பாகிஸ்தானும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மொயின் கான்


ஐசிசி கடமைகளை மதிக்க வேண்டும்:


கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து விளையாடியது. ஆதேபோல் ஆசிய கோப்பை இலங்கையில் நடத்தப்பட்டதால் அங்கும் இரு அணிகளும் விளையாடின. ஆனால் சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற்றால் இந்தியா கலந்து கொள்ளுமா என்ற கேள்வி நீடித்து வருகிறது.


இச்சூழலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி,"இந்தியா ஐசிசி கடமைகளை மதிக்க வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால், இந்தியாவில் எதிர்கால போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பதன் மூலம் பாகிஸ்தானும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்"என்று கூறியுள்ளார்.


இது தொடர்பாக பேசிய அவர்,"என்னுடைய பார்வையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் அரசியலில் இருந்து விளையாட்டை தனித்தனியாக வைத்திருக்க பிசிசிஐக்கு அறிவுறுத்த வேண்டும். உலகளவில் உள்ள ரசிகர்கள் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்கள், இது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த விளையாட்டிற்கும் பயனளிக்கிறது." என்று கூறினார். அதேபோல் தன்னுடைய மகன் அசாம் கான் பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்படவும், அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதும் ரமேஷ் ராஜா தான் என்று மொயின் கான் விமர்சித்துள்ளார்.


அசாம் கான் மிகச் சிறப்பாகவே செயல்பட்டார்:


அவர் பேசுகையில்,"உலக கோப்பை தொடருக்கான அணியில் எனது மகன் தேர்வு செய்யப்பட்டார். அந்த நேரத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய பின்னர் அவரை நீக்கிவிட்டனர். உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்ற போது சரி அதற்கு முன்னதாக பயிற்சி போட்டிகளிலும் சரி அசாம் கான் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தார்.


இருப்பினும் ஒரே போட்டியில் அவர் ஒரு பந்தில் ஆட்டமிழந்ததால் அவரை ரமேஷ் ராஜா தான் நீக்கி உள்ளார். அணியின் நிர்வாகம் மீதும் கேப்டன் மீதும் நான் எந்த வித குற்றச்சாட்டையும் சொல்ல மாட்டேன். அசாம் கான் மீதும் தவறு உள்ளது.அவர் உடல் அளவிலும் மனதளவிலும் வலிமை பெற வேண்டியது அவசியம். நிச்சயம் அவர் பிட்னசில் முன்னேற்றம் காண கவனம் செலுத்துவார். தற்போது அவர் படிப்படியாக பிட்னஸில் முன்னேற்றம் கண்டு வருவதை நானும் உணர்கிறேன்"என்றார் மொயின் கான்.