இந்தியாவின் தலை சிறந்த டெஸ்ட் அணி தொடர்பாக ஐஸ்லாந்து கிரிக்கெட் அணி ஒரு ட்விட்டர் பதிவை செய்துள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 6ஆவது இடத்தை பிடித்துள்ளார். தற்போது வரை 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8043 ரன்கள் அடித்துள்ளார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியை வழிநடத்திய சிறந்த கேப்டன் என்ற சாதனையையும் விராட் கோலி தன்வசம் வைத்துள்ளார். இவர் இந்திய அணியை 68 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி 40 டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளார். 


இந்நிலையில் ஐஸ்லாந்து கிரிக்கெட் அணியின் ட்விட்டர் பக்கம் சமீப காலங்களாக ஒவ்வொரு நாட்டின் தலைசிறந்த டெஸ்ட் அணி தொடர்பாக பதிவிட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது இந்தியாவின் தலை சிறந்த டெஸ்ட் அணி தொடர்பாக ஒரு பதிவை செய்துள்ளது. 






அதன்படி அந்த அணியில் கவாஸ்கர்,சேவாக்,திராவிட்,டெண்டுல்கர்,விஜய் ஹசாரே,தோனி,கபில்தேவ்,அஷ்வின்,கும்ப்ளே,ஸ்ரீநாத்,பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் அந்த அணியில் 12ஆவது வீரராக விராட் கோலி இடம்பெற்றுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் பலரும் இந்த ஐஸ்லாந்து கிரிக்கெட் அணியின் ட்விட்டர் கணக்கை ட்ரோல் செய்து வருகின்றனர். 






















இவ்வாறு பலரும் இது தொடர்பாக பலரும் தங்களுடைய அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண