இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. குறிப்பாக கடைசி டெஸ்ட் போட்டியில் வெறும் 3 நாட்களில் இங்கிலாந்து அணி வெற்றியை பெற்று அசத்தியது. 

 

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இழந்ததன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் தென்னாப்பிரிக்கா புள்ளிகளை இழந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தச் சூழலில் தென்னாப்பிரிக்கா தோல்வியின் காரணமாக இந்திய அணியின் இறுதிப் போட்டி வாய்ப்பு சற்று பிரகாசம் அடைந்துள்ளது. ஆனால் அதற்கு சில விஷயங்கள் இந்திய அணிக்கு சாதகமாக அமைய வேண்டும். 

 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய எப்படி தகுதி பெறும்?

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிபில் இந்திய அணிக்கு இன்னும் இரண்டு டெஸ்ட் தொடர்கள் எஞ்சியுள்ளன. அவற்றில் ஒன்று பங்களாதேஷ் அணியுடனும் மற்றொன்று பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடனும் உள்ளது. இந்திய முதலில் பங்களாதேஷ் சென்று அங்கு இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. 

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இந்தியா சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த இரண்டு டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்திய அணி தற்போது வரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்வி மற்றும் 2 டிரா செய்துள்ளது. அத்துடன்  52.08% புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் உள்ளது. 

 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல்:

அணி டெஸ்ட் வெற்றி புள்ளிகள் %
ஆஸ்திரேலியா 10 6 70
தென்னாப்பிரிக்கா 10 6 60
இலங்கை 10 5 53.33
இந்தியா 12 6 52.08
பாகிஸ்தான் 7 4 51.85

மேலும் படிக்க: டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷமி இடம்பெறாததற்கு இது தான் காரணமா?