உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23க்கான சுழற்சி முறை விரைவில் முடிவடைய இருக்கிறது.  இன்னும் மூன்று டெஸ்ட் தொடர்கள் மற்றும் 8 போட்டிகள் ஜூன் 2023 இல் இறுதிப் போட்டிக்கு முன்பாக அனைத்து நாடுகளும்  விளையாட உள்ளன.  இந்த கடினமான இரண்டு ஆண்டுகளில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக ஒன்பது அணிகள் கடுமையாக போட்டியிட்டனர், இருப்பினும் தற்போதுவரை எந்தெந்த அணிகள் இறுதிப் போட்டிகளுக்கு செல்லும் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது.


நேற்று நடைபெற்ற சிட்னி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியது. 75.56% புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா தற்போது புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர். இந்தியா 58.93% புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இலங்கை 53.33% புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 48.72% புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.


இந்தநிலையில், இங்கிலாந்து அணி கிட்டத்தட்ட டெஸ்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளில் இருந்து வெளியேறினாலும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 


டாப் 10 அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியல்: 



  1. ஜோ ரூட், இங்கிலாந்து - 1915 ரன்கள்

  2. பாபர் அசாம், பாகிஸ்தான் – 1527 ரன்கள்

  3. ஜானி பேர்ஸ்டோவ், இங்கிலாந்து - 1285 ரன்கள்

  4. உஸ்மான் கவாஜா, ஆஸ்திரேலியா - 1275 ரன்கள்

  5. மார்னஸ் லாபுசாக்னே, ஆஸ்திரேலியா - 1265 ரன்கள்

  6. ஸ்டீவ் ஸ்மித், ஆஸ்திரேலியா - 1107 ரன்கள்

  7. லிட்டன் தாஸ், வங்கதேசம் - 1024 ரன்கள்

  8. அப்துல்லா ஷபீக், பாகிஸ்தான் - 992 ரன்கள்

  9. டிராவிஸ் ஹெட், ஆஸ்திரேலியா - 973 ரன்கள்

  10. பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து - 971 ரன்கள்


இறுதிப்போட்டிக்கு செல்லுமா இந்தியா..?


அதேசமயம் இலங்கை அணி 53.33 புள்ளி மதிப்புகளுடன் 3வது  இடத்தில் உள்ளது. இந்த அணி நியூசிலாந்திற்கு எதிராக  விளையாடும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்றால்  61.11 புள்ளி மதிப்பைப் பெறும். 


4வது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா  48.72 புள்ளி  மதிப்புடன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் 2 போட்டியிலும் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்கா புள்ளி மதிப்பு 55.5 ஆக அதிகரிக்கும். இந்த அணிகளுக்கு சமமாக திகழும். 


ஒருவேளை இந்திய அணி 4 போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றால் அந்த அணியின் புள்ளி மதிப்பு 45.4 ஆக குறையும். ஒரு போட்டியில் மட்டும் வென்றால் 51.39 ஆகவும், இரண்டில் வெற்றி பெற்றால் 56.9 ஆகவும், மூன்று போட்டிகளில் வென்றால்  62.5 ஆகவும் புள்ளிகள் மதிப்பு இருக்கும்.  ஆனால் குறைந்தது  2 போட்டிகளில் வென்றால் மட்டுமே  இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான வாய்ப்பு பிரகாசமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.