உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும் அணி எது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அந்த வகையில் இந்த போட்டியில் ஐந்து அணிகளில் இடம் பெற்று உள்ளது.

முதல் இரண்டு இடம் யாருக்கு:

சொந்த நாட்டில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. மோசமான இந்த தோல்வி இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. அதேபோல் சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் முறையில் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களிடம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இச்சூழலில் தான் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் - கவாஸ்கர் டிராபியில் விளையாட உள்ளது.  முன்னதாக,நியூசிலாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த பின்னர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியாவின் ஆதிக்கம் நழுவியது, இது ஆஸ்திரேலியாவை 62.50 புள்ளிகள் சதவீதத்துடன் (PCT - Points Percentage System ) முதலிடத்திற்குத் தள்ளியது.

இதனிடையே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நுழைவதற்கு மீதமுள்ள 5 போட்டிகளில் கண்டிப்பாக நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. அந்தவகையில், பார்டர்-கவாஸ்கர் டிராபி இரு அணிகளின் பின்னடைவு மற்றும் முதல்-இரண்டு இடத்தை மீண்டும் பெறுவதற்கான ஒரு முக்கிய அம்சமாக செயல்படுகிறது.

WTC 2023-25 ​​புள்ளிகள் அட்டவணை, அணி தரவரிசை:

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023-2025) - புள்ளிகள் அட்டவணை
நம்பர்   குழு போட்டிகள் வெற்றி பெற்றது இழந்தது டிரா NR புள்ளிகள் PCT
1   ஆஸ்திரேலியா 12 8 3 1 0 90 62.5
2   இந்தியா 14 8 5 1 0 98 58.33
3   இலங்கை 9 5 4 0 0 60 55.56
4   நியூசிலாந்து 11 6 5 0 0 72 54.55
5   தென்னாப்பிரிக்கா 8 4 3 1 0 52 54.17
6   இங்கிலாந்து 19 9 9 1 0 93 40.79
7   பாகிஸ்தான் 10 4 6 0 0 40 33.33
8   பங்களாதேஷ் 10 3 7 0 0 33 27.5
9   வெஸ்ட் இண்டீஸ் 9 1 6 2 0 20 18.52