உலகக் கோப்பை 2023ல் இந்திய அணி இதுவரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ரோஹித் சர்மா தலைமையில் முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடி வரும் இந்திய அணி, முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.


 உலகக் கோப்பையில் மற்ற அணிகளை ஒப்பிட்டு பார்க்கும்போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் இந்திய அணி விளங்குகிறது. இந்த அணியில் சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா இளம் மற்றும் அனுபவ ஜோடியாக கலக்கி வருகின்றனர். மிடில் ஆர்டரில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் போன்ற உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் வலு தருகின்றனர்.






 ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா போன்ற உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். இது தவிர ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர் போன்ற சில பந்துவீச்சாளர்கள் தேவைப்படும்போது ரன்களையும் பேட்டிங்கிலும் திரட்டி தருவார்கள். 


பந்துவீச்சு பயிற்சியில் ரோஹித் சர்மா: 


கேப்டன் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் இந்திய அணிக்காக அவ்வபோது பந்துவீசுவார்கள் என்பது நமக்கு தெரியும். உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு, ரோஹித் சர்மா ஒரு செய்தியாளர் சந்திப்பில் தேவைப்பட்டால், நானும் விராட் கோலியும் பந்துவீசுவோம் என்று கூறியிருந்தார். முன்னதாக, ரோஹித் சர்மாவுக்கு  விரல்களில் பிரச்சனை இருப்பதாகவும், அதனால் தான் பந்துவீசவில்லை என்றும், ஏனெனில் அவரது பந்துவீச்சு தனது பேட்டிங்கை பாதிக்கக்கூடாது என ஒதுங்கியிருந்தார். வங்கதேசத்துக்கு எதிரான அடுத்த போட்டிக்கு முன், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா வலையில் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டார்.






சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ மற்றும் புகைப்படத்தில், இந்திய அணியின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் வலைகளில் ரோஹித் சர்மாவுக்கு பந்துவீச்சு திறன்களைக் கற்றுக்கொடுக்கிறார். புனேயில் நடைபெறவுள்ள இந்திய அணியின் நான்காவது உலகக் கோப்பை போட்டிக்கு முன், ரவிச்சந்திரன் அஸ்வின் வழிகாட்டுதலின் கீழ் ரோகித் சர்மா பந்துவீச்சு பயிற்சி மேற்கொண்டார், இது வரும் போட்டிகளிலும் கேப்டன் ரோஹித் சர்மாவின் மேஜிக்கை வெளிப்படுத்துவார் என தெரிகிறது. 


வலது கை ஆஃப் பிரேக் சுழற்பந்து வீச்சாளர் ரோஹித் ஷர்மா கடந்த காலத்திலும் அற்புதமான பந்துவீச்சு திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். ரோஹித் ஷர்மா தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 94 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ரோஹித் சர்மா, ஐபிஎல் 2009 இல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடியபோது, ​​மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டையும் கைப்பற்றினார். ரோஹித் சர்மா அபிஷேக் நாயர், ஹர்பஜன் சிங் மற்றும் ஜேபி டுமினி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி தனது ஒரே ஹாட்ரிக் சாதனையை படைத்தார்.