ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்க உள்ளது.
அண்மையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் ஆடவர் டி20 உலகக் கோப்பை நடைபெற்றது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இதனிடையே ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 அக்டோபர் 3 ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்க உள்ளது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. இச்சூழலில் தான் இந்திய ஆடவர் அணியைப் போல் இந்திய மகளிர் அணியும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை சென்ற ஹர்மன் ப்ரீத் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது.
மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 குழுக்கள்:
குழு A: இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான்
குழு B: வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, மேற்கிந்திய தீவுகள்
மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 அணிகள்:
ஆஸ்திரேலிய அணி:
அலிசா ஹீலி (கேப்டன்), டார்சி பிரவுன், ஆஷ் கார்ட்னர், கிம் கார்த், கிரேஸ் ஹாரிஸ், அலனா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், தஹ்லியா மெக்ராத் (விக்கெட் கீப்பர்), சோஃபி மோலினக்ஸ், பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, மேகன் ஷட், அனாபெல் சதர்லேண்ட், டெய்லா விலேமின் , ஜார்ஜியா வேர்ஹாம்.
இந்திய அணி:
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா (உடற்தகுதிக்கு உட்பட்டது), பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாத் சோபனா , ஸ்ரேயங்கா பாட்டீல் (உடற்தகுதிக்கு உட்பட்டது), சஜனா சஜீவன்
நியூசிலாந்து அணி:
சோஃபி டெவின் (கேப்டன்), சுசி பேட்ஸ், ஈடன் கார்சன், இஸி கேஸ், மேடி கிரீன், ப்ரூக் ஹாலிடே, ஃபிரான் ஜோனாஸ், லீ காஸ்பெரெக், அமெலியா கெர், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், மோலி பென்ஃபோல்ட், ஜார்ஜியா ப்ளிம்மர், ஹன்னா ரோவ், லியா தாஹுஹு.
பாகிஸ்தான் அணி:
பாத்திமா சனா (கேப்டன்), அலியா ரியாஸ், டயானா பெய்க், குல் பெரோசா, இராம் ஜாவேத், முனீபா அலி, நஷ்ரா சுந்து, நிடா தார், ஒமைமா சோஹைல், சதாப் ஷமாஸ், சாடியா இக்பால் (உடற்தகுதிக்கு உட்பட்டு), சித்ரா அமின், சையதா அரூப் ஷா , தஸ்மியா ரூபாப், துபா ஹாசன்.
இலங்கை அணி:
சாமரி அதபத்து (கேப்டன்), அனுஷ்கா சஞ்சீவனி, ஹர்ஷிதா மாதவி, நிலக்ஷிகா டி சில்வா, இனோகா ரணவீர, ஹாசினி பெரேரா, கவிஷா தில்ஹாரி, சசினி நிசன்சலா, விஷ்மி குணரத்ன, உதேஷிகா பிரபோதனி, அச்சினி குலசூரியா, சுகன்த்ஷிகா குமாரி, சுகன்த்ஷிகா குமாரி ஆமா காஞ்சனா.
வங்கதேச அணி:
நிகர் சுல்தானா ஜோட்டி (கேப்டன்), நஹிதா அக்டர், முர்ஷிதா காதுன், ஷோர்னா அக்டர், மருஃபா அக்டர், ரபேயா, திருமதி. ரிது மோனி, சோபனா மோஸ்டரி, திலாரா அக்டர் (விக்கெட் கீப்பர்), சுல்தானா காதுன், ஜஹானாரா ஆலம், ஃபஹிமா காதுன், தாஜ் நெஹர், திஷா பிஸ்வாஸ், ஷாதி ராணி
இங்கிலாந்து அணி:
ஹீதர் நைட் (கேப்டன்), டேனி வியாட், சோபியா டன்க்லி, நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஆலிஸ் கேப்ஸி, எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), சோஃபி எக்லெஸ்டோன், சார்லி டீன், சாரா க்ளென், லாரன் பெல், மியா பவுச்சியர், லின்சி ஸ்மித், ஃப்ரீயா கெம்ப் டானி கிப்சன், பெஸ் ஹீத்
ஸ்காட்லாந்து அணி:
கேத்ரின் பிரைஸ் (கேப்டன்), சாரா பிரைஸ் (துணை கேப்டன்), லோர்னா ஜாக்-பிரவுன், அப்பி ஐட்கன்-ட்ரம்மண்ட், அப்தாஹா மக்சூத், சாஸ்கியா ஹார்லி, சோலி ஏபெல், பிரியனாஸ் சாட்டர்ஜி, மேகன் மெக்கால், டார்சி கார்ட்டர், ஹன்னாஹ்சா லிஸ்டரி, , ரேச்சல் ஸ்லேட்டர், கேத்ரின் ஃப்ரேசர், ஒலிவியா பெல்.
தென்னாப்பிரிக்க அணி:
லாரா வோல்வார்ட் (கேப்டன்), அன்னேக் போஷ், டாஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி கிளர்க், அன்னேரி டெர்க்சன், மைக் டி ரிடர், அயன்டா ஹ்லுபி, சினாலோ ஜாஃப்டா, மரிசான் காப், அயபோங்கா காக்கா, சுனே லூஸ், துஷ்மி நாயுடு செக்னி மலாபா, ஸ்மி , சோலி ட்ரையான்.
மேற்கிந்திய தீவுகள் அணி:
ஹெய்லி மேத்யூஸ் (கேப்டன்), ஆலியா அலீன், ஷாமிலியா கானல், டியாண்ட்ரா டாட்டின், ஷெமைன் காம்ப்பெல் (துணை கேப்டன்/விக்கெட் கீப்பர்), அஷ்மினி முனிசார், அஃபி பிளெட்சர், ஸ்டாபானி டெய்லர், சினெல்லே ஹென்றி, கியான் ஜோசப், ஜேம்ஸ் நேஷன் கரிஷ்மா ராம்ஹராக், மாண்டி மங்ரு, நெரிசா கிராப்டன்