ICC World Cup Schedule: இன்னும் சற்று நேரத்தில்.. வெளியாகிறது உலகக்கோப்பை அட்டவணை..! குஷியில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை இன்று மும்பையில் 11.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

Continues below advertisement

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை கொண்ட தொடராக விளங்குவது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பது ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

இந்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியாகிறது. மும்பையில் இன்று நடைபெறும் மிக நிகழ்ச்சியில் காலை 11.30 மணியளவில் போட்டி அட்டவணை வெளியிடப்படுகிறது. தற்போது வரை உலகக்கோப்பை முதல் போட்டி வரும் அக்டோபர் 5-ந் தேதி தொடங்கும் என்றே தகவல்கள் வெளியாகி வருகிறது. அக்டோபர் 5-ந் தேதி தொடங்கினால் 100 நாட்கள் கவுண்டவுன் இன்று தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து – பதக்கத்தை தவறவிட்ட நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. அடுத்தடுத்த போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளன. முதல் போட்டி இந்தியாவின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில், பிற போட்டிகள் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதரபாத், திருவனந்தபுரம், கவுகாத்தில புனே, லக்னோ மற்றும் தரம்சாலா ஆகிய மைதானங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பாகிஸ்தான் அணி மேற்கண்ட மைதானங்களில் 5 மைதானங்களில் விளையாட உள்ளது. 

அரையிறுதி போட்டிகள் மும்பை மற்றும் சென்னை மைதானங்களிலும், இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்திலும் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அகமதாபாத் மைதானத்தில் விளையாட பாகிஸ்தான் சில அரசியல் காரணங்களால் தயக்கம் காட்டி வந்தது. இதன் காரணமாகவே தொடர்ந்த இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியாக உள்ளது.

கடைசியாக 2011ம் ஆண்டு இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா மும்பை வான்கடே மைதானத்தில் கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில், சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. கடைசி 2 இடத்தை பிடிப்பதற்கான மோதலுக்கு ஜிம்பாப்வேயில் உலகக்கோப்பை தகுதிச்சுற்று நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடர் சூப்பர் 6 சிக்ஸ் சுற்று நடந்து வருகிறது. 

 

மேலும் படிக்க: WI vs NED WC Qualifiers: வெ. இண்டீசை புரட்டி எடுத்த நெதர்லாந்து..சூப்பர் ஓவரில் 30 ரன்கள் விளாசி அபார வெற்றி..!

மேலும் படிக்க: World Cup 2023 Trophy Tour: அடேங்கப்பா! விண்வெளியில் 1.2 லட்சம் அடி உயரத்தில் அறிமுகமான உலகக்கோப்பை..ஐசிசி அதிரடி

Continues below advertisement
Sponsored Links by Taboola