ICC World Cup 2023 Venue: 13வது உலகக்கோப்பை இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வரும் செவ்வாய் கிழமை அதாவது ஜூன் 27ஆம் தேதி அட்டவணை வெளியிடப்படவுள்ளது என ஐசிசி தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இன்று உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம் மற்றும் மும்பையில் உள்ள வான்கடேவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு பலமே பேட்டிங் தான். அதனால் தான் இந்த இரண்டு மைதானங்களில் அரையிறுதிப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு மைதானங்களும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு மிகவும் ராசியான மைதானம். ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் தனது முதல் இரட்டைச் சதத்தினை கொல்கத்தா ஈடன் கார்டனில் தான் விளாசினார். அதேபோல், ஐபிஎல் தொடரில், அதிக போட்டிகளில் வான்கடே மைதானத்தில் தான் விளையாடியுள்ளார் என்பதால் மைதானத்தினைப் பற்றி அனைத்தும் நன்றாகத் தெரியும் என்பதால், வானகடேவிலும் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் அட்டவணையில், இந்தியாவில் உள்ள எந்தெந்த மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என தெரியவரும். மேலும் முதல் போட்டி எந்த மைதானத்தில் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி எந்த மைதானத்தில் நடைபெறும் என்பது குறித்தும் அந்த அட்டவணையில் தெரியவரும்.
ஏற்கனவே இந்த உலகக்கோப்பை போட்டிகள் குறித்து பாகிஸ்தான் அணி ஏற்கனவே “நாங்கள் குஜராத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் விளையாட விரும்பவில்லை எனவும், சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நாங்கள் பாதுகாப்பாக விளையாட முடியும் எனவும் கூறியிருந்தனர்.
றிவிப்பின் போது இந்தியாவில் உள்ள எந்தெந்த மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என தெரியவரும். மேலும் முதல் போட்டி எந்த மைதானத்தில் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி எந்த மைதானத்தில் நடைபெறும் என்பது குறித்தும் அந்த அட்டவணையில் தெரியவரும்.
ஏற்கனவே இந்த உலகக்கோப்பை போட்டிகள் குறித்து பாகிஸ்தான் அணி ஏற்கனவே “நாங்கள் குஜராத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் விளையாட விரும்பவில்லை எனவும், சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நாங்கள் பாதுகாப்பாக விளையாட முடியும் எனவும் கூறியிருந்தனர்.
அக்டோபர் 15ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் மோத இருப்பதாகவும், இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருப்பதாகவும் தெரிகிறது. இந்தாண்டு முதன்முறையாக உலகக் கோப்பை போட்டிகள் லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 29ம் தேதி இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இந்த மைதானத்தில் நடைபெறலாம். உலகக் கோப்பைக்காக ஏகானா மைதானத்தில் புதிய பிட்ச் உருவாக்கப்பட்டது. கான்பூருக்கு பிறகு, உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோ இரண்டாவது நகரமாக இருக்கும்.