ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கு தரவரிசை வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், தற்போது ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது.
ஜோ ரூட் முதலிடம்:
இந்த நிலையில், டெஸ்ட் தரவரிசை புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இந்த புதிய தரவரிசைப்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அசத்தல் சதம் அடித்த இங்கிலாந்து ஜோ ரூட் பேட்டிங் தரவரிசையில் 5 இடங்கள் கிடுகிடுவென ஏறி முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இரண்டு இன்னிங்சிலும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய லபுஷேனே தரவரிசையில் 2 இடங்கள் பின்தங்கி தன்னுடைய முதலிடத்தை இழந்தார்.
டாப் 5 வீரர்களுள் இந்திய வீரர்கள் ஒருவருக்கு கூட இடமில்லை. தரவரிசையில் 10வது இடத்தில் இந்திய வீரர் ரிஷப்பண்ட் 758 புள்ளிகளுடன் உள்ளார். நட்சத்திர பேட்ஸ்மேன் தரவரிசையில் ஒரு இடம் பின்தங்கி 14வது இடத்திலும் ரோகித்சர்மா 12வது இடத்திலும் உள்ளார். ரஹானே 36வது இடத்திலும், ஜடேஜா 41வது இடத்திலும் இடம்பிடித்துள்ளார். 2வது இடத்தில் கனே வில்லியம்சனும், 3வது இடத்தில் லபுஷேனேவும், 4வது இடத்தில் ட்ராவிஸ் ஹெட்டும், 5வது இடத்தில் பாபர் அசாமும் உள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் 4 இடங்கள் சரிந்து 5வது இடத்திற்கு கீழிறங்கியுள்ளார்.
அஸ்வின் முதலிடம்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்படாவிட்டாலும் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் நம்பர் 1 பந்துவீச்சாளராகவே உள்ளார். ஆண்டர்சன் 2வது இடத்திலும், ரபாடா 3வது இடத்திலும், பாட் கம்மின்ஸ் 4வது இடத்திலும், ஒல்லி ராபின்சன் 5வது இடத்திலும் உள்ளனர். பும்ரா 8வது இடத்திலும், ஜடேஜா 9வது இடத்திலும் உள்ளனர்.
ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா நம்பர் 1 இடத்தில் யாரும் நெருங்க முடியாத இடத்தில் 434 புள்ளிகளுடன் உள்ளார். அஸ்வின் 2வது இடத்தில் உள்ளார். ஷகிப் அல் ஹசன் 332 புள்ளிகளுடன் உள்ளார். இந்தியாவில் உள்ள டாப் பேட்ஸ்மேன்கள் யாருமே டெஸ்ட் தரவரிசையில் பேட்டிங்கில் டாப் 5க்குள் இல்லாதது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
ஒருநாள், டி20 தரவரிசை:
ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் 886 புள்ளிகளுடன் பேட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளார். வான் டெர் டுசென் 2வ இடத்திலும் உள்ளார். பக்கார் ஜமான் 3வது இடத்திலும், இமாம் உல் ஹக் 4வது இடத்திலும், சுப்மன்கில் 5வது இடத்திலும் உள்ளார். விராட்கோலி 8வது இடத்திலும், இந்திய கேப்டன் ரோகித்சர்மா 10வது இடத்திலும் உள்ளனர்.
ஒருநாள் போட்டி பந்துவீச்சில் ஹேசல்வுட் முதலிடத்திலும், முகமது சிராஜ் 2வது இடத்திலும், ஸ்டார்க் 3வது இடத்திலும், 4வது இடத்தில் மேட் ஹென்றி, 5வது இடத்தில் ட்ரெண்ட் போல்டும் உள்ளனர். டி20 போட்டிகள் தரவரிசையில் பேட்டிங்கில் முதலிடத்தில் சூர்யகுமார் யாதவ்வும், 2வது இடத்தில் முகமது ரிஸ்வானும், 3வது இடத்தில் பாபர் அசாமும், 4வது இடத்தில் மார்க்ரமும், 5வது இடத்தில் ரோசோவ்வும் உள்ளனர். பந்துவீச்சில் ரஷீத்கான் முதலிடத்திலும், பரூக்கி 2வது இடத்திலும், ஹேசல்வுட் 3வது இடத்திலும், ஹசரங்கா 4வது இடத்திலும், தீக்ஷனா 5வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலிலும் டாப் 5 இடத்தில் இந்திய வீரர்கள் யாருமே இல்லை.