டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணி மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் இனி வரும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் இந்திய அணி நாக் அவுட் செல்லும் வாய்ப்பு சற்று குறைவு தான். இந்தச் சூழலில் இன்று இந்திய அணி சுழல் பலம் வாய்ந்த ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் இந்திய அணி, நடப்பு உலகக்கோப்பையில் வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.


அபு தாபியில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், ஃபீல்டிங் தேர்வு செய்தது. ரோஹித் ஷர்மா, ராகுலின் சிறப்பான ஓப்பனிங்கை அடுத்து இந்திய அணி அதிரடியாக ஸ்கோர் செய்தது. இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஹர்திக் பாண்டியா(35*),ரிஷப் பண்ட் (27*) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


இந்நிலையில், கடினமான இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு, தொடக்கத்திலேயே விக்கெட் எடுத்து அட்டாக் செய்தார் ஷமி. போட்டியின் மூன்றாவது ஓவரில் ஷமி பந்துவீச்சில் ஷாசாத் அவுட்டாக, பும்ரா வீசிய நான்காவது ஓவரில் செசாய் பெவிலியன் திரும்பினார். இதனால், ஆப்கானிஸ்தானின் சேஸிங்கில் வேகம் குறைந்தது. இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் அஷ்வின், ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்த, ஆப்கான் திணறியது. இந்திய பந்துவீச்சாளர்களைப் பொருத்தவரை ஷமி (3), அஷ்வின் (2), பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.


இதனால், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு ஆப்கானிஸ்தான் 144 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்துள்ளது. நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி தனது வெற்றிக்கணக்கை தொடங்கி இருக்கிறது. எனினும், அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்து கொள்ள, அடுத்த இரண்டு போட்டிகளிலும் அதிக அளவிலான ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது!


இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டது குறித்த செய்திகளை படிக்க:










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண