டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் முதல் சூப்பர் 12 போட்டியில் ஸ்காட்லாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கப்டில் 7 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளின் உதவியுடன் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. 


இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் கையில் கோட்சர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜார்ஜ் முன்சி 22 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த விக்கெட் கீப்பர் மேட் க்ராஸ் ஆடெம் மில்னே வீசிய 6ஆவது ஓவரில் 5 பவுண்டரிகள் விளாசி நம்பிக்கை அளித்தார். இதனால் ஸ்காட்லாந்து அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் அடித்தது. 




ஆட்டத்தின் 11ஆவது ஓவரில் டிம் சௌதி வீசிய பந்தில் மேட் க்ராஸ் போல்ட் ஆகினார். அதன்பின்னர் ஸ்காட்லாந்து அணியின் ரன் விகிதம் சற்று குறைந்தது. 15 ஓவர்களில் ஸ்காட்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களுக்கு  அடித்திருந்து. கடைசி 30 பந்துகளில் அந்த அணி வெற்றி பெற 70 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டத்தின் 18ஆவது ஓவரை சோதி வீசினார். அந்த ஓவரில் ஸ்காட்லாந்து வீரர் மைக்கேல் லீஸ்க் ஒரு சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் அடித்தார். இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில்  5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 


 






முன்னதாக இந்தப் போட்டியில் ஸ்காட்லாந்து அணியின் பந்துவீச்சின் போது அந்த அணியின் விக்கெட் கீப்பர் கீரிவ்ஸ் பந்துவீச்சாளரை உற்சாகப்படுத்தினார். அப்போது அவர், ‘ஒட்டு மொத்த இந்தியாவே நம்ம பக்கம் உள்ளது’ என்று கூறினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. அது தற்போது வேகமாக பரவிவருகிறது. இந்த வீடியோ குறித்து பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க: ஆண்டவனே நம்ம பக்கம் மாதிரி... இந்தியாவே நம்ம பக்கம்- வைரலாகும் ஸ்ட்காலாந்து வீரரின் வீடியோ !