டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. விராட் கோலி படை நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் தோல்வியை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.


ஏழாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த நிலையில், இன்று நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி அடுத்து ஸ்காட்லாந்து, நமீபியாவை எதிர்கொள்கிறது. இதில் ஒரு போட்டியில் வென்றால் கூட, பாகிஸ்தான் செமி பைனலுக்கு தகுதி பெற்றுவிடும். இதேபிரிவில், அடுத்த எந்த அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும்? என்பதை தீர்மானிக்கும் முக்கிய போட்டியாக இன்றைய இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் அமைந்துள்ளது. இரு அணிகளும் அடுத்து பலம் குறைந்த அணிகளான ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்தை சந்திக்கின்றது. இந்த ஆட்டங்களில் இரு அணிகளுமே வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றில் சுலபமாக நுழைந்துவிடும் என்பதால், இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். 




கடந்த இந்திய அணியின் ஓபனிங் மோசமாக இருந்தது. கேப்டன் கோலியை தவிர, பந்துவீச்சு, பேட்டிங்கில் மற்ற வீரர்கள் சொதப்பியதால், அணியில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்பட்டாலும் கோலி அதே அணியைக் கொண்டே இன்றைய போட்டியில் விளையாடுவர் என்று கூறப்படுகிறது. தோள்பட்டை காயத்தைப் பொருத்தவரை ஹரிதி பாண்டியா நன்றாக இருக்கிறார் என்று கோலி உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், அவர் இன்றைய போட்டியில் இடம்பெறுவார் என்றே தெரிகிறது.


நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில், கடந்த போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை கண்டாலும், டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்தின் கையே ஓங்கியுள்ளது. அந்த அணிக்கு எதிராக மோதிய இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா தோல்வியே சந்தித்துள்ளது. கடந்த போட்டியில் நியூசிலாந்து பேட்டிங்கில் சொதப்பினாலும், போல்ட், சவுதி, சோதி ஆகியோர் மிரட்டலாக பந்துவீசினார்கள். இந்தியாவுக்கு எதிராக வில்லியம்சன், கான்வே, கப்தில் நன்றாகவே விளையாடியுள்ளனர். இதனால், அவர்கள் ரன் எடுக்கவிடாமல் இந்தியா பார்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய போட்டி இரண்டு அணிக்குமே வாழ்வா, சாவா ஆட்டம் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கு என்றும் நம்பலாம்.


இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவன்: கேஎல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண