ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் டாப் 10 பேட்டர்கள் பட்டியலில் இரண்டு இந்திய வீரர்கள் உள்ளனர். அதாவது இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் சூர்யகுமார் யாதவ். 860 புள்ளிகளை பெற்றுள்ள அவர் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். 


முதல் இடத்தில் சூர்யகுமார் யாதவ்:


இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணி வீரர் பில் சால்ட் 802 ரன்களுடன் உள்ளார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் 781 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் நான்காவது இடத்திலும் இருக்கிறார்கள். ஐந்தாவது இடத்தில் தென்னாப்பிரிக்கா வீரர் மார்க்ரம் உள்ள நிலையில் ஆறாவது இடத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இருக்கிறார்.


பந்து வீச்சாளர்கள் பட்டியல்:


ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும்  ருதுராஜ் கெய்க்வாட் 11 இடத்தில் உள்ளார். இந்திய அணியின் மற்றொரு வீரரான ரிங்கு சிங் 31 வது இடத்தில் இருக்கிறார். இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி 46 வது இடத்திலும், இந்திய டி20 அணியின் கேப்டன் ரோகித் சர்மா 51 வது இடத்திலும் உள்ளனர்.


டி 20 பந்து வீச்சாளர்கள் பட்டியலை பொறுத்தவரை இங்கிலாந்து அணி வீரர் அடில் ரஷித் 726 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இலங்கை அணி வீரர் வகிந்து ஹசரங்காவும் மூன்றாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஆகில் ஹொசைன் இருக்கிறார்.


இந்திய அணி வீரர் அக்ஸர் படேல் 660 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும், 5 வது இடத்தில் ரவி பிஷ்னோயும் உள்ளனர். 19-வது இடத்தில் ஆர்ஸ்தீப் சிங் இருக்கிறார். குல்தீப் யாதவ் 24 வது இடத்திலும், யுஸ்வேந்திர சாஹல் 49 வது இடத்திலும் உள்ளனர். அதேபோல், ஹர்திக் பாண்டியா 62 ஆவது இடத்திலும், சிராஜ் 79வது இடத்திலும், முகேஷ் குமார் 81வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: SANDEEP LAMICHHANE: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு; நேபாள வீரருக்கு விடுதலை


மேலும் படிக்க: RR vs PBKS : பலமான ராஜஸ்தானை சமாளிக்குமா பஞ்சாப்? டாஸ் வென்ற RR பேட்டிங்!