டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. ஐந்தாவது நாளான நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நமிபியா அணி வெற்றி பெற்றது. மற்றொரு சூப்பர் 12 போட்டியில், வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. 


ஸ்காட்லாந்து, நமிபியா அணிகள் முதல் சுற்றில் சிறப்பாக விளையாடதை அடுத்து, வரலாற்றில் முதல் முறையாக இந்த இரு அணிகளும் டி-20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. க்ரூப்:2-ல் இடம் பிடித்த இந்த இரு அணிகளுக்கான போட்டி நேற்று அபுதாபியில் நடைபெற்றது. 


இதில், டாஸ் வென்ற நமிபியா ஃபீல்டிங் தேர்வு செய்தது. நமிபியாவின் வேகப்பந்துவீச்சாளர் ரூபன் ட்ரம்பிள்மேன் முதல் ஓவரை வீச வந்தார். முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட். ஸ்காட்லாந்து ஓப்பன்ர் முன்சி க்ளீன் பவுல்டாகி வெளியேறினார். டி-20 உலகக்கோப்பை முக்கியமான சுற்றின் முதல் போட்டி, முதல் பந்து இப்படி இருந்திருக்க வேண்டாமே என ஸ்காட்லாந்து கிரிக்கெட் வருத்தப்பட்டிருக்கும். ஆனால், இப்படி ஒரு முதல் பந்தை எதிர்ப்பார்த்திடாத நமிபியா மகிழ்ச்சியில் திக்குமுக்காடியது. 


Watch video: ரீலோ.. ரியலோ அதே ஸ்டைல்.! தல அஜித்தின் offroad பைக் ரைடு வீடியோ!


முதல் பந்தோடு முடிந்திடவில்லை நமிபியாவின் அசத்தல்! இரண்டாவது பந்தில் வைடு + 1 ரன் எடுத்தனர். மூன்றாவது பந்து டாட் பால். நான்காவது பந்தில் மீண்டும் ஒரு விக்கெட். கேலம் மெக்லியாட் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஐந்தாவது பந்தில் மீண்டும் ஒரு விக்கெட். இந்த முறை ரூபனின் வேகத்தில் சிக்கியது ஸ்காட்லாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிச்சி பெர்ரிங்டன். அதனை அடுத்து கடைசி இரண்டு பந்துகள் டாட் ஆனது. 


வீடியோவை காண:



ஸ்காட்லாந்து நமிபியா, முதல் இன்னிங்ஸ், முதல் ஓவர் - ரூபர் ட்ரம்பிள்மேன் 1-2-3 


முதல் ஓவரில் வெறும் இரண்டு ரன்களே விட்டுக்கொடுத்து 3  விக்கெட்டுகளை வீழ்த்தினார் ரூபன். மறக்க முடியாத உலகக்கோப்பை முதல் போட்டியை தனது அணிக்கு பரிசளித்துள்ளார் 23 வயதேயான பந்துவீச்சாளர் ரூபன். முதல் ஓவர் சொதப்பலை அடுத்து மாளித்து விளையாடிய ஸ்காட்லாந்து அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது. எளிதான இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய நமிபியா, 19.1 ஓவர்களில், 6 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது.


இதனால், க்ரூப்:2-ல் இடம் பிடித்திருக்கும் நமிபியா 2 புள்ளிகளோடு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு அடுத்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து, இந்தியா, ஸ்காட்லாந்து அணிகள் தலா ஒரு போட்டியில் தோல்வியை சந்திருப்பதால், இனி வரும் போட்டிகள் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேற முடியும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண