டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. க்ரூப்:2-ல் இடம் பிடித்திருந்த இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவி அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றியை ஈட்டி உள்ளது. இந்நிலையில் இன்னும் ஒரு போட்டியே மீதம் இருக்கும் நிலையில், இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது? ஓர் அலசல்!


பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தோல்விக்கு பிறகு மைனசில் இருந்த இந்திய அணியின் ரன் ரேட், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு +0.073 ஆனது. ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை 6.3 ஓவர்களில் சேஸ் செய்த அணிக்கு, இப்போது +1.619 என ரன் ரேட் கூடியுள்ளது. 


இந்த வெற்றி மூலம், 2 புள்ளிகள் பெற்று க்ரூப்:2 புள்ளிப்பட்டியலில் இந்திய அணி, மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. எனினும், நமீபியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், ஆப்கானிஸ்தான், நியூலாந்து அணிகளின் வெற்றி தோல்வியை சார்ந்தே இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும் நிலை உள்ளது. 






க்ரூப்:2-ல் மீதமிருக்கும் போட்டிகள்:


நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான்


பாகிஸ்தான் vs ஸ்காட்லாந்து 


இந்தியா vs நமீபியா


க்ரூப்:2-ல் இருந்து பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரை இறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இரண்டாவது இடத்திற்கு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரண்டு பெரிய வெற்றிகளுக்குப் பிறகு இந்திய அணியின் ரன் ரேட் கூடியிருந்தாலும், நியூசிலாந்து (+1.481), ஆப்கானிஸ்தான் (+1.277) அணிகளுக்கும் பெரிய வித்தியாசமின்றி இருக்கின்றது.


இதனால், இனி வரும் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதுமட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமை அபு தாபியில் நடக்க இருக்கும் போட்டியில், நியூசிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்த வேண்டும். ஒரு வேளை நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால், 4 வெற்றிகளோடு அரை இறுதிக்கு முன்னேறிவிடும். இந்திய அணி வெளியேறிவிடும். இதனால், ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியை ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, 1 பில்லியன் இந்திய ரசிகர்களும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண