What Is ICC Stop Clock Rule: கிரிக்கெட் போட்டிகளில் எந்தவொரு அணியும் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை முடிக்க முடியாமல் போவதையும், போட்டி திட்டமிட்ட நேரத்தை விட மிகவும் தாமதமாக முடிகிறது. இதனால் பார்வையாளர்கள் நீண்ட நேரம் போட்டியை பார்க்கும் நிலைமை ஏற்படுகிறது. 


இதையடுத்து, விரைவில் சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஸ்டாப் க்ளாக் விதியை நிரந்தரமாக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. கிரிக்கெட்டின் உச்ச அமைப்பான ஐசிசி, இந்த விதியை அமல்படுத்துவதன் மூலம் சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் நேரத்தை கடைபிடிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் இருந்து சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்த விதியை ஐசிசி பயன்படுத்தப்பட்டுள்ளது. 


சோதனைக்குள்ளாக்கப்பட்ட ‘ஸ்டாப் க்ளாக்’: 


ஐசிசி கடந்த 2023 டிசம்பர் மாதம் ‘ஸ்டாப் க்ளாக்’ விதியை சோதனையாக பயன்படுத்தியது ஐசிசி. இதையடுத்து, வருகின்ற ஜூன் 1ம் தேதி நிரந்தரமாக்கப்படும் என வாரிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஐசிசி அதன் ஆண்டு வாரியக் கூட்டத்திற்கு பிறகு, “ஜூன் 2024 முதல் அனைத்து ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளிலும் ‘ஸ்டாப் க்ளாக்’ விதி கொண்டுவரப்படும். அதன்படி, வருகின்ற ஜூன் 1ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையுடன் விதி அமல்படுத்தப்படும். இந்த விதி கொண்டு வரப்படுவதன்மூலம், ஒவ்வொரு ஒருநாள் போட்டியிலும் சுமார் 20 நிமிடங்கள் சேமிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது. 






எப்படி செயல்படும் இந்த விதி? 


டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் நேரத்தை வீணடித்த அணிகள், குறிப்பிட்ட நேரத்தில் ஓவர்களை முடிக்க முடியாமல் போனால், எதிரணி அணிக்கு 5 பெனால்டி ரன்கள் கிடைக்கும். அதாவது பேட்டிங் செய்யும் அணியின் ஸ்கோரில் 5 ரன்கள் சேர்க்கப்படும்.






பந்துவீசும் அணி முந்தையை ஓவர் முடிந்த 60 வினாடிகளுக்குள் புதிய ஓவரை தொடங்க வேண்டும். இதற்காக, ஸ்டேடியத்தில் அமைக்கப்பட்ட ஒரு ‘எலக்ட்ரானிக் க்ளாக் 60 லிருந்து மீண்டும் பூஜ்ஜியமாக கணக்கிடப்படும். பந்துவீசும் அணி சரியான நேரத்தில் அடுத்த ஓவரை வீச ஆரம்பிக்கவில்லை என்றால், அதற்கு இரண்டு எச்சரிக்கைகள் கொடுக்கப்படும். அடுத்தடுத்த மீறல்களின்போது எதிரணிக்கு 5 ரன்கள் போனஸாக வழங்கப்படும். இந்த விதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த விவகாரம் குறித்து ஐசிசி குழு முடிவு செய்து வருகிறது. இதையடுத்து, இந்த ஆண்டு ஜூன் முதல் சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஸ்டாப் க்ளாக் விதி அமல்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.


டி20 உலகக் கோப்பை 2024: அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு ரிசர்வ் நாள்: 


டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி (ஜூன் 27) மற்றும் இறுதிப்போட்டி (ஜூன் 29) மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ நாளும் வழங்கப்படும் என ஐசிசி கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.