ஐபிஎல் 2024 முடிந்த கையோடு வருகின்ற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பை 2024 நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக மே 1ம் தேதிக்குள் உலகக் கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என ஐசிசி கேட்டுகொண்டது.
அதன் அடிப்படையில் நேற்று வரை ஒரு சில அணிகளை தவிர்த்து மற்ற அணிகளின் பெயர்களை வெளியிட்டது. இந்தநிலையில் நேற்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024 டி20 உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ தீம் பாடலை வெளியிட்டது. இந்த பாடலின் பெயர் "Out of this World", இதை கேஸ் மற்றும் சீன் பால் ஆகியோர் பாடியுள்ளனர்.
அதனை தொடர்ந்து, வெளியான தீம் பாடலில் வீடியோ காட்சிகளில் யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில், உலகின் மின்னல் வேக மனிதன் உசைன் போல்ட், வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜாம்பவான் சந்தர்பால் ஆகியோர் டி20 உலகக் கோப்பைக்கு பிரச்சாரம் செய்துள்ளனர். தற்போது இந்த தீம் பாடல் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
கடந்த டி20 உலகக் கோப்பையில் யார் சாம்பியன்..?
கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும், ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2024 போட்டியில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் நுழைகிறது. 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, கடந்த 2022ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுக்கு தகுதிபெறவில்லை. இந்தநிலையில், சரியாக 3 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் டி20 உலகக் கோப்பைக்கு திரும்பியுள்ளது. போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் நடத்துவதால் 2024 டி20 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளனர்.
2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகளில் விவரம்:
- இந்தியா
- ஆஸ்திரேலியா
- பாகிஸ்தான்
- இங்கிலாந்து
- தென்னாப்பிரிக்கா
- வங்கதேசம்
- ஆப்கானிஸ்தான்
- இலங்கை
- நேபாளம்
- ஓமன்
- கனடா
- அயர்லாந்து
- நியூசிலாந்து
- நமீபியா
- ஸ்காட்லாந்து
- பப்புவா நியூ கினி
- உகாண்டா
- நெதர்லாந்து
டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி விவரம்:
இந்திய அணி: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்