இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற பின்னர், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 


இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் 122 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் 121 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 266 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 


டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஐந்து இடங்களில் உள்ள அணிகள்



  1. இந்தியா - 38 போட்டிகளில் விளையாடி 122 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

  2. ஆஸ்திரேலியா - 37 போட்டிகளில் விளையாடி 117 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

  3. இங்கிலாந்து - 49 போட்டிகளில் விளையாடி 111 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

  4. நியூசிலாந்து - 29 போட்டிகளில் விளையாடி 101 புள்ளிகளை எட்டியுள்ளது. 

  5. தென்னாப்பிரிக்கா - 27 போட்டிகளில் விளையாடி 97 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 


ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் ஐந்து இடங்களில் உள்ள அணிகள் 



  1. இந்தியா - 58 போட்டிகளில் விளையாடி 121 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. 

  2. ஆஸ்திரேலியா - 45 போட்டிகளில் விளையாடி 118 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. 

  3. தென்னாப்பிரிக்கா - 37 போட்டிகளில் விளையாடி 110 புள்ளிகளுடன் விளையாடி மூன்றாவது இடத்தில் உள்ளது. 

  4. பாகிஸ்தான் - 36 போட்டிகளில் விளையாடி 109 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. 

  5. நியூசிலாந்து - 46 போட்டிகளில் விளையாடி 102 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 


டி20 கிரிக்கெட்டில் முதல் ஐந்து இடங்களில் உள்ள அணிகள்



  1. இந்தியா - 71 போட்டிகளில் விளையாடி 266 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 

  2. இங்கிலாந்து - 48 போட்டிகளில் விளையாடி 256 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

  3. ஆஸ்திரேலியா - 45 போட்டிகளில் விளையாடி 255 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

  4. நியூசிலாந்து - 63 போட்டிகளில் விளையாடி 254 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. 

  5. பாகிஸ்தான் - 48 போட்டிகளில் விளையாடி 249 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 


டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி வீரர்கள்


டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் இருவர் டாப் 10 இடத்தில் உள்ளனர். அவர்களில்  விராட் கோலி 8வது இடத்தில் 744 புள்ளிகளுடன் உள்ளார். ஜெய்ஸ்வால் 727 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா முதல் இடத்தில் உள்ளார். அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஜடேஜா 7வது இடத்தில் உள்ளார். 


ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள்


ஒருநாள் பேட்டிங் தரவரிசைப் பட்டியலைப் பொறுத்தவரையில் சுப்மன் கில் இரண்டாவது இடத்திலும் விராட் கோலி மூன்றாவது இடத்திலும் ரோகித் சர்மா நான்காவது இடத்திலும் உள்ளனர். பவுலிங்கில் சிராஜ் 4வது இடத்திலும் பும்ரா 5வது இடத்திலும் உள்ளார். குல்தீப் யாதவ் 9வது இடத்தில் உள்ளார். 


 


டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள்


டி20 கிரிக்கெட் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் முதல் இடத்திலும் ஜெய்ஸ்வால் 6வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சினைப் பொறுத்தவரையில், அக்‌ஷர் பட்டேல் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் ஐந்தாவது மற்றும் 6வது இடத்தில் உள்ளனர்.