மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (அக்டோபர் 25) நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின.
சதம் அடித்த வங்கதேச வீரர்:
அந்த போட்டியில் வங்கதேச வீரர் மஹ்முதுல்லா ரியாத் சதம் அடித்தார். அதன்படி, 111 பந்துகள் களத்தில் நின்ற அவர் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 111 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த வயதான வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் சதம் அடித்த வயதான வீரர்கள்:
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷான். கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் போது ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக சதம் அடித்தார். அப்போது அவருக்கு 38 வயது 148 நாட்கள்.
அந்த போட்டியில், 99 பந்துகள் நின்ற அவர் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 104 ரன்கள் அடித்தார்.
இரண்டாவது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இருக்கிறார். கடந்த 1987 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 103* ரன்கள் குவித்தார்.
அப்போது அவருக்கு 38 வயது 116 நாட்கள் முடிவடைந்திருந்தது. அந்த போட்டியில், 88 பந்துகள் களத்தில் நின்ற சுனில் கவாஸ்கர் 10 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 103 ரன்கள் அடித்திருந்தார். மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையின் போது சதம் அடித்ததன் மூலம் அவர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 101 ரன்கள் களத்தில் நின்ற சச்சின் டெண்டுல்கர் 8 பவுண்டரிகள் ,3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 111 ரன்கள் அடித்தார். அப்போது அவருடைய வயது, 37 வருடம் 322 நாட்கள். இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரியா இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 115 ரன்கள் எடுத்தார்.
இந்த சதத்தை சனத் ஜெயசூரியா பூர்த்தி செய்த போது அவருக்கு வயது 37 வருடம் 275 நாட்கள். நான்காவது இடத்தில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தனா இருக்கிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெறற உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார். அப்போது அவருடைய வயது 3 வருடம் 271 நாட்கள். இந்நிலையில், நேற்று (அக்டோபர் 25) நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக, வங்கதேச அணி வீரர் மஹ்முதுல்லா ரியாத் சதம் அடித்து தற்போது இந்த போட்டியில் இணைந்துள்ளார். 111 பந்துகள் களத்தில் நின்ற அவர் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 111 ரன்கள் குவித்தார். இந்த சாதனையை 37 வருடம் 262 நாட்கள் என்ற வயதில் செய்துள்ளார்.
மேலும் படிக்க: Amol Muzumdar: இனி இவர்தான் இந்திய பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர்.. அமோலை அறிவித்த பிசிசிஐ..!
மேலும் படிக்க: World Cup 2023: பாகிஸ்தான் அரையிறுதிக்கு வரவில்லை என்றால், பாபரின் கேப்டன் பதவி காலியாம்.. எச்சரிக்கும் பிசிபி..!