இங்கிலாந்தின் ஃபார்ம் பேட்டர் ஹாரி புரூக் சமீபத்திய ஐசிசி தரவரிசையில் ஜோ ரூட்டை பின்னுக்கு தள்ளி உலகின் புதிய நம்பர் 1 டெஸ்ட் பேட்டராக உருவெடுத்துள்ளார்.
நியூசிலாந்து தொடர்:
நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்த அவர் சிறந்த ஃபார்மில் உள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரில், வெலிங்டனில் நடந்த டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களில் 123 மற்றும் 55 எடுத்தார், என்ன தான் கோ ஜோ ரூட் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்தாலும், முதல் ஆட்டத்தில் டக் அவுட் ஆனது அவருக்கு தரவரிசையில் முதலிடத்தை இழப்பதற்கு காரணமாக அமைந்தது.
முதல் இடத்தில் புரூக்:
புரூக் தனது சக இங்கிலாந்து அணி வீரரை ஒரு புள்ளியில் பின்னுக்கு தள்ளி உலகின் சிறந்த பேட்டராக ஆனார். அவர் தற்போது 898 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில் ரூட் 897 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் அடிலெய்டில் இந்தியாவுக்கு எதிரான பிங்க்-பால் டெஸ்டில் 140 ரன்களை அடித்ததன் மூலம் 6 இடங்கள் முன்னேறி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
இதையும் படிங்க: Year Ender 2024 : தோனியின் வைட் பால் முதல் கோலியின் நோ பால் வரை.. ஐபிஎல் 2024ல் நடந்த சர்ச்சைகள்
சரிந்த ஸ்மித் & பண்ட்:
ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை, 724 புள்ளிகளுடன் மூன்று இடங்கள் சரிந்து ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டார் பண்ட். தரவரிசையில் மற்றொரு மாற்றம், ஆஸ்திரேலியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனான, ஸ்டீவ் ஸ்மித் , பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் 10 இடங்களுக்குள் இருந்து வெளியேறினார், அவர் 708 புள்ளிகளுடன் 11 வது இடத்தில் உள்ளார்.
சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்ப்பட்ட தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா, 753 ரேட்டிங் புள்ளிகளுடன் தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்திற்கு வந்துள்ளார். அடிலெய்டில் இந்திய அணி தோல்வியடைந்த போதிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால்811 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.