டெஸ்ட் போட்டிகளில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் ஐசிசி-யால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கோப்பையை நியூசிலாந்தும், இரண்டாவது கோப்பையையும் ஆஸ்திரேலியாவும் கைப்பற்றிய நிலையில் அடுத்தாண்டு உலக 3வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி:


இதுவரை நடைபெற்ற 2 இறுதிப்போட்டியிலும் இந்தியா இறுதிப்போட்டிக்குச் சென்ற நிலையில், இந்தியா இந்த முறையும் இறுதிப்போட்டிக்குச் செல்ல போராடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியைச் சந்தித்தது.


இதனால், இந்திய அணி கடும் நெருக்கடியில் தற்போது உள்ளது. இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்ல கீழே உள்ளவை நிகழ வேண்டும்.



  • இந்திய அணி அடுத்து நடக்கும் 3 டெஸ்ட் போட்டிகளையும் வென்று பார்டர் கவாஸ்கர் தொடரை 4-1 என்ற கணக்கில் வெல்ல வேண்டும்.

  • இந்திய அணி அடுத்து வரும் 3 டெஸ்ட் போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று ஒரு டெஸ்டை டிரா செய்து தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றால் இறுதிப்போட்டிக்குச் செல்லலாம்

  • அடுத்து வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டு போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா 1 போட்டியில் வெற்றி பெற்று 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியா அணி தாங்கள் அடுத்து ஆடும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில் தோற்க வேண்டும். அப்படி நிகழ்ந்தால் இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்லும்.

  • இந்திய அணியும் ஆஸ்திரேலியாவும் பார்டர் கவாஸ்கர் தொடரில் 2-2 என்று சரிசமமான அளவில் வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்ல முடியும்.

  • ஒரு வேளை இந்திய அணி 2-3 என்ற கணக்கில் தொடரை ஆஸ்திரேலியாவிடம் தோற்றால், பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும். ஆஸ்திரேலிய அணி இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில் ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டும்.


நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்பாக இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட முடியும் என்று இருந்த நிலையில், சொந்த மண்ணிலே இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது.


இதனால், 4 போட்டிகளை கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.