கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆஸ்திரேலியா மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஆட்டத்தில் 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து கோலி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்தியா கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று உலககோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 


அன்றைய போட்டியில் விராட் கோலியின் முக்கியமான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. மீண்டும் பல நாளுக்கு பிறகு ஒரே நாளில் விராட் கோலி ஹீரோ ஆனார். 


இதையடுத்து, வெற்றிக்கு பிறகு இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு சிறந்த பரிசை விராட் கோலி கொடுத்தார் என்று அவரது ரசிகர்கள், பிரபலங்கள், தலைவர்கள் என பலரும் விராட் கோலிக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர். 


இந்தநிலையில் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்ததன் மூலம் ஐசிசி டி20 பட்டியலில் மீண்டும் டாப் 10 இடத்திற்குள் வந்துள்ளார். இன்று ஐசிசி வெளியிட்ட டி20 பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5 இடங்கள் முன்னேறி 9 வது இடத்தை பிடித்துள்ளார். 


வழக்கம்போல், பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் டி20 தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நியூசிலாந்து தொடக்க வீரர் கான்வே 58 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். இதன்மூலம் 5 வது இடத்தில் இருந்த டேவான் கான்வே மூன்று இடங்கள் முன்னேறி 2 ம் இடம் பிடித்தார். இரண்டாம் இடத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் ஒரு இடம் பின்தங்கி 3ம்





இடத்திற்கு சென்றார். 


டாப் 10 பட்டியல் : 


1. முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) - 831 புள்ளிகள் 
2.டேவான் கான்வே (நியூசிலாந்து) - 831 புள்ளிகள்
3. சூர்யகுமார் யாதவ் (இந்தியா) - 828 புள்ளிகள்
4. பாபர் அசாம் (பாகிஸ்தான்) - 799 புள்ளிகள்
5. மார்க்கரம் (தென்னாப்பிரிக்கா) - 762 புள்ளிகள்
6. டேவிட் மாலன் (இங்கிலாந்து) - 754 புள்ளிகள்
7. ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா) - 681 புள்ளிகள்
8. பதும் நிசான்கா (இலங்கை) - 658 புள்ளிகள்
9. விராட் கோலி (இந்தியா) - 635 புள்ளிகள்
10. முகமது வாசிம் (யூஏஇ) - 626 புள்ளிகள் 


இந்திய அணியில் அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 16 வது இடத்திலும், கேஎல் ராகுல் 18 வது இடத்திலும் உள்ளனர். அதை தொடர்ந்து, இஷான் கிஷன் 31 இடத்தில் உள்ளார்.