ஐசிசியின் சர்வதேச டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை ஒவ்வொரு மாதமும் வெளியாகும். அந்தவகையில் தற்போது மீண்டும் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. 


இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான், ஹாங்காங்  ஆகிய அணிகளுக்கு இடையில் ஆசிய கோப்பை போட்டி நடந்து வருகிறது. இதில் இந்தியா,பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம்  தேதி தொடங்கிய இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் சூப்பர் 4 போட்டியில் இந்தியா பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. 


இந்நிலையில், ஐசிசி தரப்பில் இருந்து சர்வதேச டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெள்டியிட்டுள்ளது. குறிப்பாக இதில், டாப் இரண்டு இடங்களில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர்களும் அதிரடி ஆட்டக்காரர்களும் கைப்பற்றியுள்ளனர். முதல் இடத்தில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பராக உள்ள  முகமது ரிஸ்வான் கைப்பற்றியுள்ளார். அவர், 815 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பாபர் அஸாம் 794 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.  இவரைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த  எய்டன் மார்க்ரம் 792 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.  ஐந்தாவது இடத்தில், 731 புள்ளிகளுடன் இங்கிலாந்தின் டிவைன் மாலன் உள்ளார். இவரைத் தொடர்ந்து ஆறாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் ஆரோன் ஃபின்ச் 716 புள்ளிகளுடன்  உள்ளார்.  ஏழாவது இடத்தில் நியூசிலாந்தின் கான்வே 683 புள்ளிகளுடன் உள்ளார். எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடத்தில் இலங்கையின் புதும் நிஷ்கன்னாவும், ஐக்கிய அமீரகத்தின் முகமது வாசிமும் உள்ளனர். பத்தாவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ரீஷா ஹெண்ட்ரிக்ஸ் 628 புள்ளிகளுடன் உள்ளார்.  






டாப் பத்து இடத்தில் இந்த முறை ஒரேயொரு இந்திய வீரர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். இந்திய அணியின் க்ளாஸ் பேட்ஸ்மேன் எனப்படும், சூர்ய குமார் யாதாவ் 775 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார். இவர் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அதிரடியாக விளையாடி, ஆசிய கோப்பையிலும் விளையாடி வருகிறார்.  இவரைத் தொடர்ந்து,  ரோகித் சர்மா மூன்று இடங்கள் முன்னேறி 612 புள்ளிகளுடன்  14வது இடத்திலும், இஷான் கிஷன் ஒரு இடம் பின்தங்கி 580 புள்ளிகளுடன் 19வது இடத்தில் உள்ளார். 24வது இடத்தில் இருந்த ஸ்ரேயஸ் ஐயர் ஒரு இடம் பின்தங்கி 25வது இடத்திலும், 27வது இடத்தில் இருந்த விராட் கோலி இரண்டு இடங்கள் பின்தங்கி 29வது இடத்திலும் உள்ளனர். 


ஐசிசி டி20 உலககோப்பை போட்டித்தொடர் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை என்பது உலக அளவில் பெரும் கவனத்தினை பெற்றுள்ளது. குறிப்பாக ட்ரீம் லெவன், மை லெவன் போன்ற ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்தி பணம் வெல்ல நினைக்கும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திவருகிறது.