ஐசிசி ஒருநள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு அணி சார்பிலும், அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட வீரர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர், வரும் 5ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதற்கான உத்தேச அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதியாக அணியில் இடம்பெறும் 15 பேர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு கடந்த 28ம் தேதி வெளியானது. அதன்படி, 10 அணிகள் சார்பில் வெளியான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியல் கீழே விரிவாக உள்ளது.


ஆப்கானிஸ்தான்:


ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மத், நூஹர் ரஹ்மான், ரஹ்மான், ரஹ்மான், நவீன்-உல்-ஹக்.


தலைமைப் பயிற்சியாளர்: ஜோனாதன் ட்ராட்


ஆஸ்திரேலியா:


பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபோட், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க்


தலைமைப் பயிற்சியாளர்: ஆண்ட்ரூ மெக்டொனால்ட்


வங்கதேசம்:


ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ் (துணை கேப்டன்), நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தன்சித் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா ரியாத், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன், மஹதி ஹசன், மஹதி ஹசன், டன்சிம் சகிப் , ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்


தலைமைப் பயிற்சியாளர்:  சந்திக ஹத்துருசிங்க


இங்கிலாந்து:


ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க்வுட், கிறிஸ் வோக்ஸ்


தலைமைப் பயிற்சியாளர்: மேத்யூ மோட்


இந்தியா:


ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், இஷான் கிஷன், அஷ்வின், முகமது ஷமி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்


தலைமைப் பயிற்சியாளர்: ராகுல் டிராவிட்


நெதர்லாந்து:


ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தட், ரியான் க்ளீன் , வெஸ்லி பாரேசி, சாகிப் சுல்பிகார், ஷாரிஸ் அஹ்மத், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்


தலைமைப் பயிற்சியாளர்: ரியான் டென் டொஸ்கேட்


நியூசிலாந்து:


கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர் , டிம் சவுத்தி, வில் யங்


தலைமைப் பயிற்சியாளர்: கேரி ஸ்டெட்


பாகிஸ்தான்:


பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, முகமது அப்ரிடி வாசிம்


தலைமைப் பயிற்சியாளர்:  கிராண்ட் பிராட்பர்ன்


தென்னாப்ரிக்கா:


டெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, தகிப்ரா ரவுக்வாயோ, ஷம்சி, ரஸ்ஸி வான் டெர் டுசென், லிசாட் வில்லியம்ஸ்


தலைமைப் பயிற்சியாளர்: ராப் வால்டர்


இலங்கை:


தசுன் ஷனகா (கேப்டன்), குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, துஷான் ஹேமந்த, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே, கசுன் பத்திரகே, கசுன் பத்திரஜித குமார, டில்ஷான் மதுஷங்க


தலைமைப் பயிற்சியாளர்: க்ரிஷ் சில்வர்வுட்