IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் அரையிறுதி போட்டியில் அம்பயர்களாக செயல்படப்போவர்கள் யார்? என்று கீழே விரிவாக காணலாம்.

Champions Trophy IND vs AUS: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற முன்னணி அணிகள் வெளியேறிய நிலையில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா:
இந்த நிலையில், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த முதலாவது அரையிறுதி போட்டி நாளை நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதிக் கொள்கின்றன. சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிக் கொண்டால் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது.
இறுதிப்போட்டிக்குச் செல்வது யார்? என்பதைத் தீர்மானிக்கும் போட்டி என்பதால் இந்த போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த போட்டியில் நடுவர்களாக களமிறங்கப் போகும் அம்பயர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது.
அம்பயர்கள்:
கள அம்பயர்கள் - கிறிஸ் காஃபேனே, ரிச்சர்ட் இல்லிங்வொர்த்
மூன்றாவது அம்பயர் - மைக்கேல் காஃப்
நான்காவது அம்பயர் - அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்
மேட்ச் ரெஃப்ரி - ஆண்டி பைகிராஃப்ட்
அம்பயர் கோச் - ஸ்டூவர்ட் கம்மிங்ஸ்
யார் இந்த அம்பயர்கள்?
ரிச்சர்ட் இல்லிங்வொர்த்திற்கு 61 வயது ஆகிறது. இவர் இங்கிலாந்து நாட்டின் யார்க்ஷையரைச் சேர்ந்தவர். 1992ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆடிய இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தவர். 1996ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியிலும் இடம்பிடித்திருந்தார். இங்கிலாந்து அணிக்காக 9 டெஸ்ட், 25 ஒருநாள் போட்டிகள் ஆடியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 2006ம் ஆண்டு முதல் நடுவராக செயல்பட்டு வருகிறார்.
மற்றொரு அம்பயரான கிறிஸ் காஃபேனேவிற்கு 49 வயது ஆகிறது. அவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் 83 முதல் தர போட்டிகளிலும், 113 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் ஆடியுள்ளார். 2010ம் ஆண்டு முதல் அம்பயராக பணியாற்றி வருகிறார். 2015, 2019 உலகக்கோப்பை போட்டிகளில் அவர் அம்பயராக பணியாற்றியுள்ளார்.
2வது அரையிறுதி போட்டி: ( தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து)
கள நடுவர்கள் - குமார் தர்மசேனா - பால் ரேஃபீல்
3வது அம்பயர் - ஜோயல் வில்சன்
4வது அம்பயர் - ஆசன் ராசா
ரெஃப்ரி - ரஞ்சன் மதுகலே
அம்பயர் கோச் - கார்ல் ஹர்ட்டர்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் அரையிறுதிப் போட்டி நாளை துபாயில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. நியூசிலாந்து - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் 2வது அரையிறுதி போட்டி லாகூரில் நடக்கிறது.