ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் கலந்து கொள்ள  இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராததற்கு காரணம்  பாஜக தான் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் குற்றம் சாட்டியுள்ளார்.


சாம்பியன்ஸ் டிராபி: 


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தானில் நடைப்பெற உள்ளது. ஆனால் இந்த தொடரில் பாதுக்காப்பு காரணங்களை காட்டி பிசிசிஐ இந்திய ஆடும் போட்டிகளை ஐக்கிய அமீரகத்தில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தது. ஆனால் பாகிஸ்தான் இதற்கு சம்மதம் தெரிவிக்கவிக்காமல் போட்டிகளை பாகிஸ்தானில் தான் நடத்துவோம் என்று உறுதியாக உள்ளனர். ஐசிசியும் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களிடம் பேச்சு வார்த்தையில் தற்போது ஈடுப்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டி அட்டவணை இது வரை வெளியிடப்படாமல் உள்ளது. 


இதையும் படிங்க: Abhimanyu Easwaran: ரோகித்துக்கு பதில் இவரா? பும்ரா எடுக்கும் ரிஸ்க்.. சாதிப்பாரா அபிமன்யூ ஈஸ்வரன்?


சோயிப் அக்தர் கருத்து: 


இந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் வராததற்கு பின்னால் அரசியல் காரணம் இருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் சோயிப் அக்தர்  பேசினார். அதில் "இனிமேல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்பது குறித்து பிசிசிஐ கையில் இனி எதுவும் இல்லை, எல்லாமே பாஜக அரசு கையில் உள்ளது. இந்திய பாகிஸ்தான் வருவது குறித்து அவர்கள் தான் முடிவு செய்வார்கள்" என்று சோயிப் அக்தர் கூறியிருந்தார்.


"பேக் சேனல் பேச்சுக்கள் இருக்கும். போர் நடக்கும் நாட்களில் கூட, இந்த பேக் சேனல் பேச்சுக்கள் இருக்கும். நாம் நம்பிக்கையை இழக்கக்கூடாது. நாம் ஒரு தீர்வை நிச்சயம் ஏற்ப்படுத்த வேண்டும். ஐசிசிக்கு இந்தியாவில் இருந்து தான் 95-98 சதவீத ஸ்பான்சர்ஷிப் வருகிறது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ”






"ஒரு வேளை பாகிஸ்தான், இந்திய அணியை பாகிஸ்தானுக்கு வர வைக்க தவறினால் இரண்டு விஷயங்கள் நடக்கும், ஒன்று 100 மில்லியன் டாலர் ஸ்பான்சர்ஷிப்பை பாகிஸ்தான் இழக்கும், அடுத்ததாக போட்டியை நடத்தும் நாட்டுக்கு அந்த பணம் முழுவதும் செல்லும்.  இரண்டாவதாக, இந்தியா பாகிஸ்தானுக்கு விளையாட வந்தால் நல்லது. ஆனால் பாகிஸ்தானில் இந்தியா விளையாடுவது என்பது அந்நாட்டு அரசாங்கத்தின் கையில் தான் உள்ளது என்று பாஜக அரசு குறித்து கருத்து சொல்லியிருந்தார்,


அடுத்ததாக "விராட் கோலி முதல்முறையாக பாகிஸ்தானில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறார். பாகிஸ்தானில் விராட் விளையாடுவதை பார்க்க முழு பாகிஸ்தானும்  விரும்புகிறது. பாகிஸ்தானில் அவர் சதம் அடிப்பதை கற்பனை செய்து பாருங்கள். அது எப்படி இருக்கும் என்று; அவர் இங்கு சதம் அடிக்காமல் சீக்கிரம் வெளியேறினாலும் பரவாயில்லை. அவர் தனது வாழ்க்கையில் அவர் எல்லா நாடுகளிலும் ஆடிய முழு நிறைவை அடைவார் என்று சோயப் அக்தர் தெரிவித்திருந்தார்.


ஐசிசியின் நிலைபாடு என்ன?


ஏற்கெனவே வந்த தகவல்களின் படி, இந்தியா ஏன் பாகிஸ்தானில் விளையாட தயங்குகிறது என்பது குறித்து பாகிஸ்தான் ஐசிசியிடம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும், இந்த வார இறுதிக்குள் சாம்பியன்ஸ் டிராபி அட்டவணையை ஐசிசி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ‘ஹைப்ரிட்’ மாடலை ஏற்றுக்கொள்ளும்படி மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.