நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்கும் முதல் பார்டர்-கவாஸ்கர் டெஸ்டில் இந்தியா அணியை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு இரண்டாவது குழ்ந்தை பிறந்துள்ளதால் அவரும் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. முதல் டெஸ்டுக்கு கேப்டனாக ஜஸ்பீரித் பும்ரா நியமிக்கப்பட உள்ளார் என்று தெரிகிறது. இந்த நிலையில் ரோகித்துக்கு பதில் அபிமன்யூ ஈஸ்வரன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்புள்ளது.
ஜெய்ஸ்வாலுடன் ஒப்பனர் யார்?
ரோஹித் இல்லாததால், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் கேஎல் ராகுல் இன்னிங்ஸைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷுப்மான் கில் முதல் டெஸ்டில் போட்டியில் இருந்து வெளியேறியதால், ராகுல் மூன்றாவது இடத்திற்கு மாற்றப்படலாம். அப்படியானால், அபிமன்யு ஈஸ்வரன் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது . ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியில் நான்கு இன்னிங்ஸ்களில் 36 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், தொடக்க அணியில் அபிமன்யு ஈஸ்வரன் இடம்பிடிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் துருவ் ஜூரெல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 23 வயதான அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 80 மற்றும் 68 ரன்கள் எடுத்திருந்தார்.
மிடில் ஆர்டரில் சர்ஃபராஸ் கானுக்கு பதிலாக துருவ் ஜுரல் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.. மும்பை பேட்டரான சர்ஃப்ராஸ் கான் சமீபத்தில் நியூசிலாந்திற்கு எதிராக சதம் அடித்திருந்தாலும், அதன் பிறகு அவரது ஃபார்மில் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது, மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் போதிய அனுபவம் அவருக்கு இல்லாததால் முதல் டெஸ்டில் துருப் ஜூரல் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: Virat Kohli : காத்திருக்கும் ரெக்கார்ட்ஸ்! பழைய அண்ணாமலையா திரும்பி வருவாரா கிங் கோலி?
அறிமுகமாகிறாரா நிதிஷ் குமார்?
பெர்த்தில் மைதானத்தில் நிலவும் வேகம் மற்றும் பவுன்ஸ் காரணமாக இந்தியா அணியில் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரையாவது சேர்க்க வாய்ப்புள்ளது. ஹர்ஷித் ராணா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இருவரும் கடந்த வாரம் WACA இல் நடந்த இந்திய அணிக்குள்பட்ட ஆட்டத்தின் போது அதிக நேரம் பந்து வீசினர். இருப்பினும், தகவல்களின்படி, நிதீஷ் ராணாவே களமிறங்க வாய்ப்புள்ளது. இதனையடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் ஒருவர் மட்டுமே அணியில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018 இல் பெர்த்தில் நடந்த டெஸ்டின் போது, இந்திய அணி ஒரு சுழற்பந்து வீச்சாளர் கூட இல்லாமல் களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் உத்தேச பட்டியல்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த் (கீப்பர்), துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.