ஐசிசி சாம்பியஸ் டிராபி தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விலகியுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025:
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அமீரகத்தில் ஹைபிரிட் மாடலில் நடைப்பெற உள்ளது. இதற்கான தங்கள் அணியின் பட்டியலை ஏற்கெனவே அறிவிட்டது, ஒரு வேளை அணியில் மாற்றங்கள் தேவைப்பட்டால் பிப்ரவரி 13 ஆம் தேதிக்குள் மாற்றம் செய்யலாம் என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க: IND Vs ENG 3rd ODI: ஒயிட்-வாஷ் செய்யுமா இந்தியா? ஃபயர் விடுவாரா கோலி? இங்கிலாந்து உடன் 3வது ஒருநாள் போட்டி
5 பேர் விலகல்:
ஏற்கெனவெ காயம் காரணமாக ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ், மிட்சேல் மாரஷ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர், கடந்த வாரம் தான் அந்த அணியின் ஆல் ரவுண்டரான மார்கஸ் ஸ்டோயினிஸ் ஒரு நாள் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் தான் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலியா அணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர், மிட்செல் ஸ்டார்க் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இந்த தகவலை ஆஸ்திரேலிய தேர்வு குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி உறுதி செய்தார்.
2023 ஆன் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்த 5 பேர் ஆஸ்திரேலிய அணியில் இருந்து விலகி இருப்பது அந்த அணிக்கு பெரிய அடியாக விழுந்துள்ளது.
இதையும் படிங்க: Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
ஜார்ஜ் பெய்லி கருத்து:
மிட்செல் ஸ்டார்க்கின் விலகல் குறித்து பேசிய தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி "மிட்சின் முடிவை நாங்கள் புரிந்துகொண்டு மதிக்கிறோம்" என்றும் "அவரது இழப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு அடியாகும், ஆனால் ஆஸ்திரேலிய அணிக்காக வேறு யாராவது ஒரு முத்திரை பதிக்க ஒரு வாய்ப்பை இது வழங்கும்." என்றார்.
கம்மின்ஸ் இடம் பெறாததால், சாம்பியன்ஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். பவர் ஹிட்டர் ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், மேலும் பேட்டிங்கில் மூன்றாவது இடத்தில் மார்ஷுக்குப் பதிலாக களமிறங்கக்கூடும், மேட் ஷார்ட் மற்றும் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்புள்ளது. லெக் ஸ்பின்னர் தன்வீர் சங்காவும் நீண்ட நாட்களுக்கு பிறகு அணியில் இடம் பிடித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸி அணி:
டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி , பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல் , தன்வீர் சங்கா, மேத்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா.