ஐசிசி சாம்பியன்ஸ் டிராபில் இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைப்பெறது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி:


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) (டிசம்பர் 19 அன்று 2025) சாம்பியன்ஸ் டிராபி ஹைப்ரிட் மாடலைப் பயன்படுத்தி அல்லது நடுநிலையான இடத்தில் நடத்தப்படும் என்று உறுதி செய்தது.


பாகிஸ்தானில் நடைபெறத் திட்டமிடப்பட்ட, பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் போட்டி, நடத்தும் நாட்டிற்கு இந்தியா செல்ல மறுத்ததால் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டது. இருப்பினும், ஐசிசி தற்போது முடிவெடுத்துள்ளது, "2024-2027 உரிமைகள் சுழற்சியின் போது ஐசிசி நிகழ்வுகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் நடுநிலையான இடத்தில் நடத்தப்படும்" என்று கூறியுள்ளது.






இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதட்டங்கள் காரணமாக  2008 ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளும் இரு தரப்பு போட்டிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் ஐசிசி தொடர்களில் மட்டும் மோதின, பாகிஸ்தான் அணி மட்டும் 2012 ஆம் இந்தியாவிற்கு வந்து ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் மட்டும் கலந்து கொண்டன், இந்தியா கடைசியாக 16 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானுக்குச் சென்றது. இருப்பினும், 2023 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் இந்தியாவுக்குச் சென்றது.


பணிந்த பாகிஸ்தான்:


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி, இந்தியாவின் போட்டிகளை வேறு நாட்டில் விளையாடும் ஹைப்ரிட் ஹோஸ்டிங் மாடலுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால் ஐசிசி தலைவர் ஜெய்ஷாவின் தலையீட்டிற்கு பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்ப்பட்டது.


மேலும் படிக்க: Ravichandran Ashwin : ”நிம்மதியா இருக்கு.. ஓய்வு பற்றி வருத்தமில்லை.”. சென்னை திரும்பிய அஸ்வின் பேட்டி


எந்தெந்த தொடர்கள்:


இது பிப்ரவரி மற்றும் மார்ச் 2025 இல் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி 2025 (பாகிஸ்தான் நடத்துகிறது), அத்துடன் ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 (இந்தியா நடத்துகிறது) மற்றும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026 ஆகியவற்றுக்குப் பொருந்தும். (இந்தியா மற்றும் இலங்கையால் நடத்தப்பட்ட உள்ளது).


2028 ஆம் ஆண்டில் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை பிசிபி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது, அங்கு நடுநிலையான இட ஏற்பாடுகளும் பொருந்தும்.


எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்கும்.