சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தமிழக வீரர் அஸ்வின் நேற்று ஓய்வை அறிவித்த நிலையில் இன்று காலை சென்னை திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டிக்கு பிறகு இந்திய நட்சத்திர சூழற்பந்து வீச்சாளர்ரான ரவி அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. 


இதையும் படிங்க: Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்


அஸ்வின் இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கேட்டுகளும், 3503 ரன்களும் அடித்துள்ளார். அதே போல 116 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளும், 65 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார். 


சென்னை வந்த அஸ்வின்: 


இந்த நிலையில் அஸ்வின் எப்போது நாடு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தார் அஸ்வின், நாடு திரும்பிய அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கூறி வரவேற்றனர். 






அதே போல் வீட்டிற்கு சென்ற அஸ்வினுக்கு நீ பொட்டு வச்ச தங்க குடம்.. ஊருக்கு நீ மகுடம் பாட்டுக்கு டிரம்ஸ் வாசித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


அஸ்வின் பேச்சு: 


இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஸ்வின் பேசுகையில் "இறுதியாக 2011 உலக கோப்பை வென்று வீடு திரும்பிய போது இதேபோல் வரவேற்பு இருந்தது. அதே உணர்வுதான் இப்போதும் உள்ளது. ஓய்வை அறிவித்தது குறித்து எனக்குள் எந்த வருத்தமும் இல்லை. நான் சிஎஸ்கேவுக்காக விளையாட போகிறேன். என்னால் முடிந்தவரை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன். அதற்காக ஆச்சரியப்படாதீர்கள். இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின்தான் ஓய்வை அறிவித்துள்ளார். எனக்குள் இருக்கும் கிரிக்கெட் வீரர் இன்னும் ஓயவில்லை.






ஓய்வை அறிவித்தது எனக்கு பெரிதாக எமோஷனலாக இருக்கவில்லை. ஆனால் என்னை சுற்றி இருந்தவர்களுக்கு அது  எமோஷனலாக இருந்திருக்கும், ஆனால் அது சில நாட்களில் சரியாகும் என்று நான் நினைக்கிறேம். என்னை பொறுத்தவரை இந்த அறிவிப்பு என்பது எனக்கு நிம்மதியாக இருக்கிறது ஓய்வு குறித்த முடிவு கடந்த சில மாதங்களாகவே மனதில் இருந்தது.


இதையும் படிங்க: Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்


அதனால் காபா டெஸ்ட்டின் 4வது நாளில் ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்று நினைத்தேன், அதனால் கடைசி நாளில் எனது ஓய்வை முடிவை அறிவித்துவிட்டேன் என்றார்.