ஐசிசி ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட்டில் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

Continues below advertisement

ICC T20 கிரிக்கெட் வீரர்:

இந்திய அணியின் டி 20 கேப்டனாக உள்ள சூர்யகுமார் யாதவ், ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா, நியூசிலாந்தை சேர்ந்த மார்க் சாப்மேன் மற்றும் உகாண்டா அணியை சேர்ந்த அல்பேஷ் ராம்ஜானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ICC T20 கிரிக்கெட்  வீரங்கனை:

2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கும் 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. அதில் இலங்கை அணியின் கேப்டன் சாமரி அதபத்து, இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லெஸ்டோன், வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஹேலி மேத்யூஸ் மற்றும் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான எல்லிஸ் பெர்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Continues below advertisement

வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள்:

2023 ஆம் ஆண்டில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி, இந்திய அணி பேட்ஸ்மேன் யஜஸ்வி  ஜெய்ஸ்வால் , இலங்கை அணி பந்து வீச்சாளர்  தில்ஷன் மதுஷங்கா மற்றும் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனைகள்:

வங்காளதேச வீராங்கனை மருஃபா அக்டர் , இங்கிலாந்து அணி வீராங்கனை லாரன் பெல், ஸ்காட்லாந்து வீராங்கானை டார்சி கார்ட்டர் மற்றும் ஆஸ்திரேலிய அணி வீராங்கனை  ஃபோப் லிட்ச்ஃபீல்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 

மேலும் படிக்க: Mohammed Siraj: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்... அனலாய் பறந்த முகமது சிராஜ்! அசத்தல் ரெக்கார்டு!

 

மேலும் படிக்க: T 20 உலகக்கோப்பை.. விராட் கோலி.. ரோஹித் சர்மா விளையாடுவார்களா? அஜித் அகர்கர் ஆலோசனை! வெளியான முக்கிய தகவல்!