இந்திய கிரிக்கெட் அணி:


இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு வருகிறது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி20 போட்டிகள் சமநிலை பெற்றது.


ஒருநாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியிடம் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனிடையே, இரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று  ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


2008-ல் நடந்த சம்பவம்:


முன்னதாக, கடந்த 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற சம்பவத்திற்கு இந்திய அணி பழிதீர்த்ததாக இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.  கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது இந்திய அணி.


அதன்படி, இந்திய அணி சார்பில் வாசிம் ஜாஃபர் மற்றும் விரேந்திர் ஷேவாக் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில், வாசிம் ஜாஃபர் 9 ரன்களிலும், ஷேவாக் 6 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.






பின்னர் வந்த ராகுல் ட்ராவிட், விவிஎஸ் லக்‌ஷ்மண், சௌரவ் கங்குலி ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதில் சௌரவ் கங்குலி டக் அவுட் ஆனார்.  அடுத்தவந்த எம்.எஸ்.தோனி 14 ரன்களும் கடைசி வரை களத்தில் நின்ற இர்பான் பதான் அதிக பட்சமாக 21 ரன்களை எடுத்தார். பின்னர் வந்த அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஆர்பி சிங் மற்றும் ஸ்ரீ சாந்த் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க 20 ஓவர்களில் இந்திய அணி எடுத்த ரன்கள் வெறும் 76 மட்டுமே.


பழிக்குப் பழி:


இந்நிலையில் தான், தென்னப்பாரிக்காவில் உள்ள கேப்டவுன்  நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில்  இன்று ஜனவரி 3 ஆம் தேதி  நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 55 ரன்களில் சுருட்டி பழிதீர்த்திருக்கிறது இந்திய அணி. அதன்படி, 23. 2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்க அணி 55 ரன்கள் மட்டுமே எடுத்தது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


 


மேலும் படிக்க: Mohammed Siraj: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்... அனலாய் பறந்த முகமது சிராஜ்! அசத்தல் ரெக்கார்டு!


 


மேலும் படிக்க: T 20 உலகக்கோப்பை.. விராட் கோலி.. ரோஹித் சர்மா விளையாடுவார்களா? அஜித் அகர்கர் ஆலோசனை! வெளியான முக்கிய தகவல்!