2022 ஆம் ஆண்டுக்கான ICC விருதுகள் எல்லா வடிவ விளையாட்டுகளிலும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு அறிவிக்கப் பட்டு வருகிறது. பென் ஸ்டோக்ஸ், பாபர் அசாம், சூர்யகுமார் யாதவ் போன்றவர்கள் வென்றிருக்கும் விருதுகள் குறித்த விபரங்கள் இங்கே.


ஐசிசி ஆண்களுக்கான அசோசியேட் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர்


நமீபியாவின் கெர்ஹார்ட் எராஸ்மஸ் இந்த விருதை வென்றார். 2022 ஆம் ஆண்டில், அவர் ஒருநாள் போட்டிகளில் 56.23 சராசரியில் 956 ரன்களை எடுத்தார், அதே நேரத்தில் 38.25 சராசரியில் 306 ரன்கள் டி20 போட்டிகளில் எடுத்துள்ளார். அவரது சுழற்பந்து வீச்சால் ஒருநாள் போட்டிகளில் 12 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ஐசிசி மகளிர் அசோசியேட் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர்


ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஈஷா ஓசா இந்த விருதை வென்றுள்ளார். அவர் கடந்த ஆண்டு 23 இன்னிங்ஸ்களில் கிட்டத்தட்ட 700 ரன்களை எடுத்தார், மேலும் 15.4 சராசரியில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சிலும் பங்காற்றி உள்ளார்.



ஐசிசியின் வளர்ந்து வரும் ஆண்கள் கிரிக்கெட் வீரர்


தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன் கடந்த வருடம் நல்ல ஃபார்மில் இருந்தார். அவருக்கு அது ஒரு மகத்தான வெற்றிகரமான ஆண்டாக இருந்தது. அவர் 19.02 சராசரியில் 36 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்தார், அதே நேரத்தில் பேட்டிங் 234 ரன்களை எடுத்தார்.


ஐசிசியின் வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை


ஐசிசியின் இந்த ஆண்டின் வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் ரேணுகா சிங் வென்றுள்ளார். அவர் தனது சிறந்த சீம் மற்றும் ஸ்விங் பந்துவீச்சில் அனைவரையும் கவர்ந்தார், கடந்த ஆண்டில் 40 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்தார். அவர் ஆஸ்திரேலியாவின் டார்சி பிரவுன், இங்கிலாந்தின் ஆலிஸ் கேப்சி மற்றும் அவரது சக வீராங்கனை யாஸ்திகா பாட்டியா ஆகியோரை முறியடித்து இந்த விருதை வென்றுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: Suicide : சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில்: கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்த ஜோடி.. காதலி உயிரிழப்பு, காதலன் கவலைக்கிடம்.. என்ன நடந்தது?


ஐசிசியின் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீரருக்கான ரேச்சல் ஹெய்ஹோ பிளின்ட் டிராபி


2022 ஆம் ஆண்டு ஸ்கிவரின் அதி பயங்கர ஃபார்ம் அவருக்கு ரேச்சல் ஹெய்ஹோ பிளின்ட் டிராபியை வெல்ல உதவியது. ODIகளில் ஒரு அற்புதமான ஆண்டைத் தவிர, அவர் டெஸ்டிலும் சிறந்து விளங்கினார், 121 சராசரியில் 242 ரன்கள் எடுத்தார்.


ஐசிசியின் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி


பாபர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபியை வென்றுள்ளார். அவரது டி20, ஒருநாள் பெர்ஃபார்மன்ஸ் கடந்த ஆண்டு மனதைக் கவரும் வகையில் இருந்தது. அவர் 2022 இல் எட்டு சதங்கள் மற்றும் 15 அரை சதங்களை அடித்துள்ளார், 54.12 சராசரியில் 2500 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளார்.


ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது


நேபாள வீரர் ஆசிப் ஷேக்கிற்கு ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது வழங்கப்பட்டுள்ளது. அயர்லாந்து வீரர் ஆண்டி மெக்பிரைன் ரன் எடுக்க முயன்றபோது தடுமாறி விழுந்ததால், ரன் அவுட் செய்யாததற்காக ஷேக்கிற்கு இந்த மரியாதைக்குரிய விருது வழங்கப்பட்டது.


ஐசிசி ஆண்டின் சிறந்த நடுவர்


முன்னாள் இங்கிலாந்து வீரர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ஐசிசியின் சிறந்த நடுவருக்கான தனது இரண்டாவது விருதை பெறுகிறார் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு வென்றிருந்தார். 



சிறந்த கிரிக்கெட் வீரர் - டி20 (ஆண்கள்)


இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு டி20 வடிவத்தில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் ஆடினார். 2022 இல் மட்டும் அவர் 68 சிக்ஸர்களை அடித்தார்: T20I வரலாற்றில் ஒரு வருடத்தில் எந்த வீரரும் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். மொத்தத்தில், அவர் 46.56 சராசரி மற்றும் 187.43 என்ற அபரிமிதமான ஸ்ட்ரைக் ரேட்டில் 1164 ரன்கள் சேர்த்தார்.


சிறந்த கிரிக்கெட் வீராங்கனை - டி20 (மகளிர்)


ஆஸ்திரேலியாவின் Tahlia McGrath ஐசிசி மகளிர் T20I கிரிக்கெட்டிற்கான ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதை வென்றார். அவர் 16 போட்டிகளில் 62.14 சராசரியில் 435 ரன்கள் எடுத்தார் மற்றும் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி யுள்ளார்.


சிறந்த கிரிக்கெட் வீரர் - ஒருநாள் போட்டி (ஆண்கள்)


கடந்த ஆண்டு, பாபர் ஒன்பது போட்டிகளில் மூன்று சதங்களுடன் 84.87 சராசரியில் 679 ரன்கள் எடுத்தார். அவர் தனது வெற்றிகரமாக 2021 ஆம் ஆண்டிலும் இந்த விருதை வாங்கியதை தொடர்ந்து மற்றொரு மறக்கமுடியாத ஆண்டை தனது பேட்டால் உருவாக்கி உள்ளார். 


சிறந்த கிரிக்கெட் வீராங்கனை - ஒருநாள் போட்டி (மகளிர்)


இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர் 2022 இல் ஐந்து அரை சதங்கள் மற்றும் இரண்டு சதங்களை அடித்தார். அவர் 833 ரன்களை ஒருநாள் போட்டிகளில் அடித்துள்ளார். பெண்கள் உலகக் கோப்பையின் போது, அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 148* ரன்களை அடித்து அனாயசமாக ஒரு இன்னின்ஸ் ஆடினார். 


ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்


இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் பேட் மற்றும் பந்தில் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த ஆண்டில் அவரது தலைமைதான் தனித்து நின்றது. அவரது ஆக்ரோஷமான கிரிக்கெட்டின் கீழ், இங்கிலாந்து 10 டெஸ்ட் போட்டிகளில் ஒன்பதில் வெற்றி பெற்றது. இதில் பாகிஸ்தானில் ஒரு வரலாற்று தொடர் வெற்றியும் அடங்கும்.