சென்னை புறநகர் பகுதியையும், சென்னையும் இணைக்க மிக முக்கிய ரயில் வழித்தடமாக தாம்பரம் சென்னை கடற்கரை வழித்தடம் இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான தொடர் வண்டிகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.




நேற்று  சென்னை கடற்கரையில் இருந்து  இரவு 8:30 மணி அளவில் தாம்பரம் நோக்கி மின்சார ரயில் சென்றது.  அப்போது காதல்ஜோடி ஒன்று கட்டிப்பிடித்தபடி நிலையில், ரயில் முன்பு பாய்ந்தனர். இதில் இளம் பெண் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காதலன் பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினர். தகவலறிந்து மாம்பலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காதலனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.




மேலும் இருவரின் செல்போன்களை எடுத்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கி காரணத்தினால் இருவரின் செல்போன்களும் நொறுங்கி உள்ளதால், காவல்துறையினர் விசாரணையை முடக்கி உள்ளனர். பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் இளைஞரின் பெயர் இளங்கோ என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த பெண்ணிற்கு 20 வயது இருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து உயிரிழந்த காதல் ஜோடிகள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது



Suicidal Trigger Warning:
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)