ஜிம்பாப்வேயின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் டெய்லருக்கு ஐசிசி ஊழல் எதிர்ப்பு சட்டத்தை மீறியதற்காக அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் மூன்றரை ஆண்டுகள் விளையாட அவருக்கு ஐசிசி தடை விதித்துள்ளது.
டெய்லர் கடந்த ஆண்டு ஓய்வு பெறுவதற்கு முன்பு 205 ஒருநாள், 34 டெஸ்ட் மற்றும் 45 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 2004 முதல் 2021 வரை 284 சர்வதேச போட்டிகளில் விளையாடி 17 சதங்களுடன் 9,938 ரன்கள் எடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐசிசி ஊழல் தடுப்பு சட்ட விதிகளை மீறியதற்காக டெய்லர் தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
"ஐசிசி ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக நான்கு குற்றச்சாட்டுகள் மற்றும் ஊக்கமருந்து எதிர்ப்பு சட்டத்தை மீறியதாக ஒரு தனி குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட பிரெண்டன் டெய்லருக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து மூன்றரை ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 24ஆம் தேதி, டெய்லர் ஒரு இந்திய தொழிலதிபருடனான சந்திப்பின் போது முட்டாள்தனமாக கோகோயின் எடுத்துக் கொண்டதன் மூலம் பிளாக்மெயில் செய்யப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார். இந்த ஒட்டுமொத்த கிரிக்கெட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
"நாங்கள் பானங்கள் அருந்தினோம், மாலையின் போது அவர்கள் வெளிப்படையாக எனக்கு கோகோயின் வழங்கினர். நான் முட்டாள்தனமாக அதனை அடுத்தேன். அடுத்தநாள் காலையில், அதே ஆண்கள் எனது ஹோட்டல் அறைக்குள் நுழைந்து, கோகோயின் சாப்பிடுவதற்கு முந்தைய நாள் இரவு எடுத்த வீடியோவை என்னிடம் காட்டி, அவர்களுக்கான சர்வதேச போட்டிகளில் நான் ஃபிக்ஸ் செய்யவில்லை என்றால், வீடியோவை பொதுமக்களுக்கு வெளியிடுவேன் என்று என்னிடம் கூறினார்கள். இதனால், அதிர்ச்சி அடைந்தேன். மேலும் அவர்களில் 6 பேர் எனது ஹோட்டல் அறையில் இருந்ததால், எனது சொந்த பாதுகாப்பிற்காக அவர்களின் மிரட்டலால் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சி அதற்கு சம்மதம் தெரிவித்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு நடந்த இந்த சம்பவத்தை இப்போது வெளியுலகுக்கு தெரிவிக்கிறேன். இதனால், ஐசிசி என் மீது நடவடிக்கை எடுக்கும் என்று எனக்கு தெரியும், அதனை நான் ஏற்றுக்கொள்கிறே” என்று கூறினார்.
இந்த சம்பவத்தின் காரணமாக டெய்லர் தற்போது மனநோய் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்