நட்சத்திர கிரிக்கெட் வீரர்:



இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். கடந்த 2013 சாம்பியன்ஸ் ட்ராபி, 2015 உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் ட்ராபி 2018 ஆசிய கோப்பை ஆகிய தொடர்களில் அதிக ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியவர். ரசிகர்கள் இவரை மிஸ்டர் ஐசிசி என்றும் அழைக்கின்றனர். 


இச்சூழலில், 37 வயதை தாண்டியுள்ள ஷிகர் தவான், சமீக காலங்களாக சிறப்பாக விளையாடததால் 2023 ஆசிய மற்றும் 2023 உலகக் கோப்பை ஆகியவற்றில் கழற்றி விடப்பட்டார்.இதனிடையே, ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாட இருக்கிறார் தவான். 


கருத்து வேறுபாடு:


முன்னதாக, கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணான ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜோரவர் என்ற மகன் இருக்கிறார். ஆனால், 2021 ஆம் ஆண்டு தவான் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து  வேறுபாடு காரணமாக தவானிடம் இருந்து பிரிந்து சென்ற ஆயிஷா முகர்ஜி மகனையும் பிரித்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்று விட்டார்.


அதற்காக தொடரப்பட்ட வழக்கில் தன்னுடைய மகனை ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் பள்ளி விடுமுறை நாட்களில் தவான் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் கடந்த ஒரு வருடமாக தன்னுடைய மகனை கண்ணில் கூட காட்டாமல் வைத்திருப்பதாக தற்போது ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.


பிளாக் செய்யப்பட்டுள்ளேன்:


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டகிராம் பதிவில், ”உன்னை பார்த்து ஒரு வருடமாகி விட்டது. தற்போது 3 மாதங்களாக நான் அனைத்து இடங்களிலும் பிளாக் செய்யப்பட்டுள்ளேன். எனவே ஏற்கனவே பேசிய அதே புகைப்படத்தை வைத்து உனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறேன் என்னுடைய மகனே. உன்னை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாமல் போனாலும் இப்போதும் டெலிபோன் வாயிலாக உன்னை தொடர்பு கொள்வேன். உன்னால் பெருமையடைகிறேன்.


நீ நன்றாக வளர்ந்து வருவாய் என்பது எனக்கு தெரியும். உன்னை எப்போதும் மிஸ் செய்கிறேன். கடவுளின் அருளால் நாம் மீண்டும் சந்திக்கும் நேரத்திற்காக காத்திருக்கிறேன். குறும்புத்தனமாக இரு. ஆனால் பணிவு, இரக்கம், பொறுமை, வலிமை ஆகியவற்றையும் கொண்டிரு.


உன்னை பார்க்கா விட்டாலும் தினம்தோறும் உன்னுடைய நலம் பற்றியும் நான் என்ன செய்கிறேன் என்பதை பற்றியும் மெசேஜ் எழுதிக் கொண்டிருக்கிறேன். லவ் யூ ஜோரா” என்று கூறியுள்ளார். இவரது இந்த பதிவு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.


 


மேலும் படிக்க: IPL 2024: ஐபிஎல் 2024 டைட்டில் ஸ்பான்சர்ஷிப்... சீன நிறுவனங்களுக்கு ஆப்படிக்கும் பிசிசிஐ?


 


மேலும் படிக்க: Kagiso Rabada: இந்திய அணியினை சிதைத்த ரபாடா; சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை