T20 WC 2024: கிரிக்கெட் உலகில் அடுத்து நடைபெறவுள்ள மிகவும் முக்கியமான மற்றும் மிகப்பெரிய சர்வதேச போட்டி என்றால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்தான். இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மொத்தம் 20 அணிகள் களமிறங்கவுள்ளது. இதில் இந்திய அணி பிரிவு ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன. 


இந்த டி20 கிரிக்கெட் வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் மும்முரமாக தயாராகிக் கொண்டு உள்ளன. இந்த உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணிக்கு தனிப்பட்ட முறையில் டி20 கிரிக்கெட் போட்டிகள் பெரிதாக இல்லை. அதிலும் குறிப்பாக இந்திய அணியில் இடம்பெறவுள்ள வீரர்களுக்கு உள்ள மிகப்பெரிய டி20 கிரிக்கெட் தொடர் என்றால் அது ஐபிஎல்தான். 


இப்படியான நிலையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் மிகவும் முக்கியமான கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில் அவர், ”நடைபெறவுள்ள 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் கட்டாயம் இருக்க வேண்டும். இவர்களின் கடந்த ஐபிஎல்- லீக்கில் இருந்து மிகச் சிறப்பாக உள்ளது. இம்முறை உலகக் கோப்பை கிரிக்கெட் அமெரிக்காவிலும் வெஸ்ட் இண்டீஸிலும் நடைபெறவுள்ளது. அமெரிக்காவில் மைதானம் எப்படி இருக்கும் என யாருக்கும் தெரியாது. இப்படியான நிலையில் அங்கு சூழலை உணர்ந்து விளையாட அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவை. எனவே அணியில் கட்டாயம் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இருக்க வேண்டும் என நான் தனிப்பட்ட முறையில் நினைக்கின்றேன். டி20 உலகக் கோப்பையில் விளையாட ரோகித் சர்மாவும் விராட் கோலியும் என்ன நினைக்கின்றார்கள் எனத் தெரியவில்லை மேலும், அணி நிர்வாகமும் என்ன நினைக்கின்றது எனத் தெரியவில்லை. அணி நிர்வாகத்தின் தரப்பில் அதிகபட்சமாக ரோகித் மற்றும் விராட் கோலியின் உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பலாம், ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் இருவரும் 2024ஆம் ஆண்டிற்கான டி20 இந்திய அணியில் கட்டாயம் இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். இவர்கள் இருந்தால் இந்திய அணி கட்டாயம் கோப்பையை வெல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.   


கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியும் ரோகித் சர்மாவும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


 


டி20 உலகக் கோப்பை குழுக்கள்


குழு A: இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா


குரூப் பி: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்


குழு சி: நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினியா


குழு D: தென்னாப்பிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ், நெதர்லாந்து, நேபாளம்