உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்படாதது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பல கிரிக்கெட் விமர்சகர்கள் அந்த முடிவை விமர்சித்தனர். அவருடைய புகழ்பெற்ற டெஸ்ட் வாழ்க்கைக்கு இது ஒரு மிகப்பெரிய அடியாகும். 474 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தபோதிலும், உலக தரவரிசையில் பத்தாண்டுகளுக்கு மேலாக முதல் 10 இடங்களில் நீடித்து, தற்போதைய தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள அஸ்வின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் களமிறக்கப்படாதது பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்திய அணி கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் வேண்டும் என்ற முடிவில் களமிறங்கியதால் அஸ்வினுக்கு அணியில் இடமில்லாமல் போனது. இறுதியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


என் வாழ்கை முடிந்ததாக எண்ணினேன்


இந்த நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு கிரிக்கெட்டில் தனது காலம் முடிந்துவிட்டதாக அவர் உணர்ந்தபோது, அவர் தனது மனைவி பிரித்தியிடம் கூறியதை நினைவு கூர்ந்தார். WTC இறுதிப்போட்டி முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், அஸ்வின் கடந்த ஆண்டு பங்களாதேஷ் டெஸ்ட் தொடரின் போது அவருக்கு ஏற்பட்ட முழங்கால் காயத்தை குறித்து பேசினார். அந்த சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, பிப்ரவரி 2023 இல் நடைபெறும் பார்டர்-கவாஸ்கர் தொடர் தனது கடைசி தொடராக இருக்கும் என்று அவர் தனது மனைவியிடம் கூறியுள்ளார். அதோடு அவரது பழைய பந்துவீச்சு நுட்பம் அவரது காயத்திற்கு வழிவகுத்ததால் தனது பந்துவீச்சை சற்று மாற்ற விரும்புவதாகவும் கூறினார்.



பழைய பந்துவீச்சு முறை எனக்கு முழங்கால் வலியை தருகிறது


“விக்கெட்டுகள் அல்லது ரன்களால் மட்டுமல்ல, என் வாழ்க்கையில் நான் செய்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். என்னால் தொடர்ந்து என்னை புதுப்பித்துக் கொள்ள முடிந்தது. கிரிக்கெட் வீரர்களை என்றல்ல, பொதுவாகவே வயதாகும்போது பாதிக்கும் ஒரு விஷயம், பாதுகாப்பின்மை. அந்த பயத்தில், இன்னும் அதிகமாக செய்ய முற்படுவீர்கள். அதுவே உங்களை வீழ்திவிடும். நான் வங்கதேசத்திலிருந்து திரும்பி வந்ததும், ஆஸ்திரேலியத் தொடர் எனது கடைசித் தொடராக அமையும் என்று என் மனைவியிடம் கூறினேன். எனக்கு முழங்கால் பிரச்சனை இருந்தது. நான் என் நுட்பத்தை மாற்றப் போகிறேன் என்று சொன்னேன், ஏனென்றால் என் பழைய நுட்பம், என் முழங்காலை தொந்தரவு செய்தது. என் முழங்கால் சிறிது சிறிதாக வளைந்தது. டி20 உலகக்கோப்பையில் என்னால் அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியவில்லை," என்று அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: TN Rain Alert: குஷியான செய்தி மக்களே.. இன்று முதல் மூன்று நாட்களுக்கு மழை கொட்டப்போகுது.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..


2013-14 சமயங்களில் வீசியது போல மாற்றப் போகிறேன்


வங்கதேசத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அவரது முழங்கால் வீங்கியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். ஆரம்பத்தில், முட்டாள்தனம் என்று ஒதுக்கித் தள்ளிய தனது பந்துவீச்சை மாற்றுவதற்கான தனது எண்ணத்தை குறித்து அவர் தற்போது யோசிக்க துவங்கினார். எனவே அந்த சுற்றுப்பயணத்திற்குப் பிறகு NCA க்கு சென்று, ஊசி போட்டுக் கொண்டு, நாக்பூருக்குச் செல்வதற்கு முன் தனது புதிய நுட்பத்தில் பயிற்சி எடுக்க துவங்கியுள்ளார். “இரண்டாவது டெஸ்டில் (வங்கதேசத்தில்) வலிக்க ஆரம்பித்தது. கால் வீங்கி இருந்தது. நான் மூன்று நான்கு வருடங்கள் இந்த நுட்பத்தில் தான் நன்றாக பந்து வீசினேன், இல்லையா? இப்போது அதனை மாற்றுவது மிகவும் முட்டாள்தனமான காரியமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனாலும் நான் அந்த முடிவை எடுத்தேன். முழங்காலில் நிறைய சுமை உள்ளது, இது மாறுவதற்கான நேரம் மற்றும் நான் 2013-14 இல் வீசிய நட்பதிற்கு திரும்பப் போகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.



தொடர் நாயகன் விருது வென்றதில் மகிழ்ச்சி


"எனவே நான் பெங்களூர் சென்றேன், அந்த நேரத்தில் நான் ஒரு ஊசி போட வேண்டியிருந்தது, அதனால், என் நுட்பத்தை மாற்றினேன். நான் பந்து வீச ஆரம்பித்தேன், என் முழங்கால் வலி மறைந்தது. நான் நாக்பூரில் மூன்று-நான்கு நாட்கள் பயிற்சி செய்தேன், நான் களத்திற்கும் சென்றேன். முதல் நாள் டெஸ்டில் மூன்று நான்கு ஓவர்கள் பந்து வீச்சாளராக கூட உணரவில்லை, ஆனால் எனக்குள் உள்ள விழிப்புணர்வால் அதைத் தொடர்ந்தேன். அந்த நேரத்தில் தொடர் நாயகன் விருது பெற்றதில் பெருமை அடைகிறேன். கடந்த நான்கு-ஐந்து ஆண்டுகளில் நான் சிறப்பாக பந்து வீசிய தொடர்களில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன்," என்றார்.