உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமாகியவர் விராட் கோலி.  விராட்கோலி சமூக வலைதளங்களில் எப்போதும் மிகவும் பரபரப்பாக இயங்கி வருபவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் விராட்கோலியை 209 மில்லியன் நபர்கள் பின்தொடர்கிறார்கள்.


இன்ஸ்டாகிராமில் அதிகளவு பாலோவர்ஸ்களை வைத்துள்ள நபர்களுக்கு வருவாய் என்பது கொட்டும். அந்த வகையில் 209 மில்லியன் பாலோவர்ஸ்களை வைத்துள்ள விராட்கோலிதான், இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் முதல் 25 நபர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசியாவைச் சேர்ந்த ஒரே நபர் ஆவார்.




இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் நபர்களின் பட்டியலில் ஒட்டுமொத்த அளவில் 14வது இடத்தில் உள்ளார். கோலி பதிவிடும் ஒவ்வொரு போஸ்டிற்கும் 1 லட்சத்து 88 ஆயிரம் டாலர் வருவாய் கிடைக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 8 கோடியே 69 லட்சம் வருமானம் கிடைக்கிறது. விராட்கோலி அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் மதிப்பு இருப்பது போல, அவர் போடும் ஒவ்வொரு போஸ்டிற்கும் மதிப்பு உள்ளது.


உலகளவில் இன்ஸ்டாகிராம் மூலமாக அதிகளவில் சம்பாதிக்கும் நபர்களின் பட்டியலில் கால்பந்து புகழ் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். போர்ச்சுகலைச் சேர்ந்த அவருக்கு 442 மில்லியல் பாலோவர்ஸ்கள் உள்ளனர்.  அவர் இன்ஸ்டாகிராமில் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் 23 லட்சத்து 97 ஆயிரம் டாலர் வருவாய் ஈட்டுகிறார். இரண்டாவது இடத்தில் அமெரிக்காவின் பிரபல மாடல் கைலி ஜென்னரும், மூன்றாவது இடத்தில் கால்பந்து ஜாம்பவான் லயனல் மெஸ்ஸியும் உள்ளனர்.




விராட்கோலியை இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி பேஸ்புக், டுவிட்டரிலும் லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். விராட்கோலி தனது குடும்பத்துடன் செலவிடும் நேரங்களையும், அவ்வப்போது செல்லும் வெளியூர் பயணங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படமாக பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு வீரர்களிலே 200 மில்லியனுக்கு மேல் பாலோவர்ஸ்களை இன்ஸ்டாகிராமில் வைத்துள்ள மூன்று பேரில் விராட்கோலியும் ஒருவர். முதல் இரு இடத்தில் ரொனால்டோவும், மெஸ்ஸியும் உள்ளனர். 


மேலும் படிக்க : IND vs WI, 1st ODI Live: வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ஹோல்டருக்கு கொரோனா..!


மேலும் படிக்க : Ravindra Jadeja Injury: ஆல் ரவுண்டர் ஜடேஜாவுக்கு காயம்..! முதல் இரு போட்டிகளில் இருந்து விலகல்..! இந்தியாவுக்கு பின்னடைவு..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண