IND vs WI, 1st ODI Live: ஷாய் ஹோப் அவுட்..! 33 ரன்களுக்கு 1 விக்கெட்..!
IND vs WI, ODI Live: வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா மோதும் முதல் ஒருநாள் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
ABP NADU Last Updated: 22 Jul 2022 11:57 PM
Background
வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. குயின்ஸ் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த ஒருநாள் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட்...More
வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. குயின்ஸ் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த ஒருநாள் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. அடுத்த வருடம் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்று பல வீரர்கள் முனைப்பில் உள்ளனர். இந்தச் சூழலில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் எதிர்பார்க்க வேண்டிய 3 வீரர்கள் யார்? யார்?தீபக் ஹூடா:இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் தீபக் ஹூடா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் நம்பர் 3 இடத்தில் களமிறங்கி அசத்தினார். இந்தத் தொடரில் விராட் கோலி இடம்பெறாததால் நம்பர் 3 இடத்தில் தீபக் ஹூடா களமிறங்க வாய்ப்பு அதிகம் என்று கருதப்படுகிறது. அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தன்னுடைய இடத்தை தக்கவைப்பார் என்று எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அர்ஷ்தீப் சிங்:இந்திய அணியின் முக்கியமான டெர்த் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளரான பும்ரா இந்தத் தொடரில் களமிறங்கவில்லை. ஆகவே டெர்த் ஓவர்களில் பந்துவீசும் வாய்ப்பு அர்ஷ்தீப் சிங்கிற்கு வழங்கப்படும். இங்கிலாந்து அணிக்கு அதிராக சவுதாம்டன் போட்டியில் இவர் சிறப்பாக பந்துவீசினார். எனவே இந்தத் தொடரில் டெர்த் ஓவர்களில் யார்க்கர் வீசி எதிரணியை திணறடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சஞ்சு சாம்சன்:இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தற்போது வரை ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே களமிறங்கியுள்ளார். அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடர் தன்னுடைய திறமையை நிரூபிக்க முக்கியமான தொடராக அமையும் என்று கருதப்படுகிறது. ரிஷப் பண்டிற்கு பதிலாக அணியின் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் களமிறங்குவதால் அவருக்கு மூன்று போட்டிகளிலும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். இதை பயன்படுத்தி அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் தொடர்:இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது வரை 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. அவற்றில் 67 போட்டிகளில் இந்தியாவும், வெஸ்ட் இண்டீஸ் அணி 63 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தற்போது வரை 39 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 போட்டிகளிலும், இந்தியா 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்பேஸ்புக் பக்கத்தில் தொடரட்விட்டர் பக்கத்தில் தொடரயூட்யூபில் வீடியோக்களை காண
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ஷாய் ஹோப் அவுட்..! 33 ரன்களுக்கு 1 விக்கெட்..!
இந்திய அணி நிர்ணயித்துள்ள 309 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 33 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. தொடக்க வீரர் ஷாய் ஹோப் முகமது சிராஜ் பந்தில் 7 ரன்னில் அவுட்டானார்.