ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் ஆட உள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று டிரினிடாட் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.


இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிகோலஸ் பூரண் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்த நிலையில், இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இன்றைய போட்டியில் களமிறங்கவில்லை.






அவருக்கு வலது காலின் முட்டிப்பகுதியில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகாத காரணத்தால் அவர் இன்றைய போட்டியில் களமிறங்கவில்லை. இந்த நிலையில், காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா இன்றைய போட்டி மட்டுமின்றி, அடுத்த ஒருநாள் போட்டியிலும் ஆடமாட்டார் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.


ஜடேஜா காயம் காரணமாக ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஆகும். அவருக்கு பதிலாக இன்று ஆல் ரவுண்டராக அக்‌ஷர் படே,ல், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். ஏற்கனேவே கொரோனா தொற்று காரணமாக கே.எல்.ராகுல் ஆடாத நிலையில் தற்போது ஜடேஜாவுக்கும் காயம் ஏற்பட்டிருப்பது இந்திய அணிக்கு மிகுந்த சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. 


காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் ஜடேஜாவை இந்திய அணியின் மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தவான் கேப்டனாக களமிறங்கியுள்ள நிலையில், ஸ்ரேயாஸ் அய்யர் துணைகேப்டனாக களமிறங்கியுள்ளார். இந்த தொடரில் கோலி, ரோகித், பும்ரா, ரிஷப்பண்ட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க : Foreign Leagues Cricket: வெளிநாட்டு டி20 லீக்குகளில் இந்திய வீரர்களா..? பி.சி.சி.ஐ. விரைவில் முடிவு...!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண