World Cup Semi Final Price: உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்ரிகா அணிகள் தோல்வியுற்று போட்டியில் இருந்து வெளியேறியுள்ளன.


உலகக் கோப்பை:


கடந்த மாதம் 5ம் தேதி இந்தியாவில் தொடங்கிய, ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பையில் 10 அணிகள் பங்கேற்றன. ரவுண்ட் - ராபின் அடிப்படையில் நடைபெற்ற லீக் சுற்றின் 45 போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.  அதில் முதல் மற்றும் நான்காவது இடத்தை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள், முதல் அரையிறுதிப் போட்டியில் விளையாடின. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அவற்றின் முடிவில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற, நியூசிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் போட்டியில் இருந்து வெளியேறின. இந்நிலையில், இந்த இரண்டு அணிகளுக்கும் கிடைக்கப் போகும் பரிசுத்தொகை எவ்வளவு என்பதை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


நியூசிலாந்து அணிக்கான பரிசுத்தொகை:


நியூசிலாந்து அணி லீக் சுற்றின் முடிவில் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்தது. அந்த ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும். அதோடு, அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியதற்காக 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக கொடுக்கப்படும். அதன்படி, மொத்தமாக 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது, இந்திய மதிப்பில் 8 கோடியே 32 லட்ச ரூபாய் நியூசிலாந்து அணிக்கு பரிசாக வழங்கப்படும். 


தென்னாப்ரிக்கா அணிக்கான பரிசுத்தொகை:


லீக் சுற்றின் முடிவில் 7 வெற்றிகளுடன் தென்னாப்ரிக்கா அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது. அந்த ஒவ்வொரு வெற்றிக்காகவும் தலா 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களும், அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியதற்காக 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக கொடுக்கப்படும். அதன்படி, மொத்தமாக 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய் தென்னாப்ரிக்கா அணிக்கு பரிசாக வழங்கப்படும். 


மற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை:


இதனிடயே, லீக் சுற்றில் தலா 4 வெற்றிகளை பதிவு செய்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள், தலா 1.6 லட்சம் அமெரிக்க டாலர்களை பரிசாக பெற உள்ளன. இங்கிலாந்து அணி 1.2 லட்சம் அமெரிக்க டாலர்களையும், வங்கதேசம், இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் தலா 80 ஆயிரம் அமெரிக்க டாலர்களையும் பரிசாக பெறும்.


கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை:


லீக் சுற்றில் விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி ஏற்கனவே 3.6 லட்சம் அமெரிக்க டாலர்களை வென்றுள்ளது. 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி 2.8 லட்சம் அமெரிக்க டாலர்களை கைப்பற்றியுள்ளது. இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 33 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும். தோல்வியுறும் அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 16 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்